காட்சி 70]

காட்சி 70·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கருடன் பதிப்பகம்

பரந்தாமன் : புண்யகோடியை அரஸ்ட் செய்ய போலீஸ் போயிருக்கிறது! இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கு வந்து விடுவார்கள்!

கருடன் : அய்யோ இப்ப எங்க ஓடுறது !

பரந்தாமன்: மாறுவேஷத்தில் ஓடினால்தான் போலீஸார் கண்ணிலிருந்து தப்பிக்கலாம்.

கருடன் : மாறுவேஷமா?

பரந்தாமன் : ஆமாம். என்ன மாறுவேஷம் போடுவது?

கருடன் : உனக்குத்தான் பைத்யம் மாதிரி நடிக்கத் தெரியுமே!

பரந்தாமன் : சே. அதெல்லாம் பழசாப் போச்சு. போலீஸுக்குப் புரிஞ்சுடும்!

கருடன் : அப்புறம் ஆப்புட்டுக்க வேண்டியதுதானா?

(போலீஸ் ஜீப் சப்தம் கேட்டு ஓடுகிறார்கள். மாடியில் இருந்து ஆபீஸ் பையன் தூங்கி எழுந்து வருகிறான். போலீஸார் வந்து)

இன்ஸ்பெக்டர் : ஏ...கருடன் எங்கே?

(பையன் தூக்கக் கலக்கத்தில் விழிக்கிறான்)

இன்ஸ்பெக்டர்: பரந்தாமன் எங்கே?

(அதற்கும் விழிக்கிறான் கண்ணைத் துடைத்தபடி)

இன்ஸ்பெக்டர்: நீ உண்மையைச் சொல்லமாட்டே. நீயும் அவுங்க ஆளுதானே?

பையன் : இல்லிங்க! நான் சேத்திலே மலர்ந்த செந்தாமரை ! என்னை விட்டுடுங்க!

இன்ஸ்பெக்டர்: ம் .. தேடிப் பாருங்க.