காட்சி 68]

காட்சி 68·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(போலீஸ் ஸ்டேஷன் - இரவு

போலீஸ்: போலீஸார் மீது கல்வீச்சு!

II போலீஸ்: மில்லின் கதவையே தூள் தூளாக உடைத்து விட்டார்கள். மில் முதலாளி வீட்டிலும் கல் வீசினார்கள்.

போலீஸ்: தெருவில் ஜனங்கள் நடமாடவே பயப்படுகிறார்கள்.

போலீஸ்: நாளைக்கு காலையிலே பெரிய ஊர்வலம் ஒண்ணு இருக்காம்.

சப்- இன்ஸ்பெக்டர்: (வந்து) சரி, முக்கியஸ்தர்களை யெல்லாம் கைதுசெய்ய உத்திரவு வந்திருக்கு. புறப்படுங்க!