காட்சி 67]
காட்சி 67·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[புண்யகோடி வீடு - இரவு
[புண்யகோடி கதவைத் தட்டல்]
குரல் : ராதா ராதா!
(பரந்தாமன் வேறு பக்கமாக வெளியேறுகிறான். புண்யகோடி வருகிறான். பரந்தாமன் வந்ததைச் சொல்ல முனைகிறாள்)
புண்யகோடி : ராதா சாப்பாடு போடு சீக்கிரம்!
ராதா : ..........
புண்யகோடி : என்னா... இன்னைக்கு நேரத்லயே சாப்ட்டு படுக்கணும்...
(கிராமபோன் வைத்துப் பாடியதற்காக கிராமபோனைக் காட்டுகிறாள்)
புண்யகோடி : ஆமாம் ! இப்பதான் சங்கீதம் கேட்கிற வேளை! சாப்பாட்டைப் போடு நீ!
(பரந்தாமன் போன ஜன்னலைக் காட்டுகிறாள்)
புண்யகோடி : ஜன்னல் திறந்திருந்தா சாத்துறதுதானே ...
(இன்னும் ஏதோ சொல்லப் போகிறாள்)
புண்யகோடி : அது கெட்டுது போ ! நீ சாப்பாடு போடுறியா இல்லியா