காட்சி 65]
காட்சி 65·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[மில் முதலாளி ரூம்
முதலாளி : (பரந்தாமனிடம்) உஷாவின் இஷ்டத்துக்கு விரோதமா திருமணம் செய்ய மாட்டேன்.
பரந்தாமன் : பெண்புத்தி பின்புத்தி என்பார்கள். இந்த ஒரு விஷயத்தில் பெற்றோர்கள் அபிப்ராயத்திற்குத்தான் பெண்கள் நடக்க வேண்டும்.
முதலாளி : பெற்றோர்கள் இஷ்டமே வேறு மாப்பிள்ளைக்கு அவளைக் கொடுக்க வேண்டும் என்று தானே.....
பரந்தாமன் : அப்படியானால் முடியாது. இல்லையா? உம்.
முதலாளி: இது என்னய்யா கேள்வி! நல்லாயிருக்கு .....
பரந்தாமன் : கடைசியாகச் சொல்கிறேன், உஷாவை எனக்குக் கொடுத்தால் சரி ; இல்லாவிட்டால் பெரியதொரு புரட்சியை சமாளிக்க நேரிடும்.
முதலாளி: என்னய்யா பூச்சி காட்ற...
பரந்தாமன் : இந்தத் தடவை பணத்தைக் கொடுத்து ஏமாற்ற முடியாது பரந்தாமனை !
முதலாளி: பெண்ணைக் கொடுத்து ஏமாறச் சொல்றியா? முடியாது ! எது வேண்டுமானால் செய்துக்கொள் போ !
(பரந்தாமன் கோபமாக வெளியேறுகிறான்)