காட்சி 64]

காட்சி 64·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[வாட்ச்மேன் வீடு

வாட்ச்மேன் : ஏம்மா வருத்தப்பட்டுகிட்டே இருக்கே ! சந்தோஷமா இரும்மா !

குமுதா: எனக்கேது சந்தோஷம் ! உங்களுடைய நிலைமையில் நான் வேறே பாரமா வந்திருக்கிறேனே என்று நினைக்கும் ......

வாட்ச்மேன் : பரவாயில்லேம்மா... அதனால என்னம்மா! உன் புருஷன் ஜெயில்லேருந்து வர்ர வரையிலும் நீ இங்கேயே இருக்கலாம். எனக்குத்தான் வேற யாரு! நீ தான் எம் பொண்ணு மாதிரி !.

குமுதா : உங்க உதவியை மறக்கவே முடியாது !.

வாட்ச்மேன் : சரி, பத்திரமாயிரும்மா ! நான் ஆஸ்பத்திரிக்குப் போய்ட்டு வாரேன்.