காட்சி 63]

காட்சி 63·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கருடன் பதிப்பகம்

புண்யகோடி: எத்துக்காக இதெல்லாம் சொல்றேன்னா தொழிலாளர் கோரிக்கை கூடிய சீக்கிரம் நிறைவேறியாகணும். நம்மை நம்பிகிட்டு ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் இருக்காங்க!

பரந்தாமன் : கவலைப்படாதீர்!

புண்யகோடி: நீங்க அதுக்குத்தான் திட்டம் தீட்றிங்கன்னு தெரியுது! இருந்தாலும் சில தொழிலாளிங்க கொஞ்சங்-

கொஞ்சமா அந்தப் பாண்டியன் கட்சியிலே சேர்ந்துகிட்டு, பகுத்தறிவு அது இதுன்னு பேசிகிட்டு நம்பளை கொஞ்சம் கேவலமா நினைக்கிறாங்க!

பரந்தாமன் : பரவாயில்லை. அவர்களால் என்ன செய்ய முடியும்? அவனுந்தான் ஜெயில்ல கிடக்கிறான். உம். நீங்க போங்க நான் எல்லாம் உடனடியாக கவனிக்கிறேன்.

புண்யகோடி : நான் வர்ரேன். நமஸ்காரம். என்ன, உங்களைத்தானே...

கருடன்: வாழ்க தொழிலாளி வர்க்கம் !

பரந்தாமன் : இவன் வேற தொழிலாளி தொழிலாளின்னு உயிரைவாங்குறான்.

கருடன்: அட சும்மா இருப்பா ! அந்தத் திரை மறைவிலே தானே நம்ம நினைச்சதெல்லாம் நடத்த முடியுது!

பரந்தாமன் : நினைத்ததெல்லாம் வெற்றிதான்,ஆனாலும் அந்த உஷா விஷயம் Failure ஆயிட்டுதே !

கருடன் : அதெல்லாம் ஒண்ணும் ஆகாது ! அதுக்குத்தான் சொல்றேன், நீ உஷாவை கல்யாணம் பண்ணிட்டீன்னா, அவ்வளவு பெரிய மில்லு உனக்குச் சொந்தம்! ஆயிரக் கணக்கான தொழிலாளிகள் உனக்கு அடிமை ...

பரந்தாமன் : தொழிலாளி தலைவன் மில் முதலாளி மகளை கல்யாணம் செய்வது.....

கருடன் : அட ''மாஸ் சைகாலஜி" தெரியாது உனக்கு? அதுக்கும் ஒரு காரணம் சொல்லிவிடலாம்.

பரந்தாமன் : சொல்லலாம். ஆனால் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது

கருடன்: அப்படித்தான் பேசணும், அப்பறம் தலைவர்னா என்னா லக்ஷணம் நான் சொல்றபடி செய்யப்பா !

பரந்தாமன் : உஷாவைக் கல்யாணம் பண்ணவேண்டும். அவ்வளவு தானே!

கருடன் : ஆமாம்! அப்படிச் செஞ்சா எவ்வளவோ காரியத்துக்கு செளகரியம். முதல்ல நம்ப பதிப்பகத்தையே விருத்தி பண்ணலாம்.

பரந்தாமன்: சரி, அக்காளிடமே சொல்லி பெண் கேட்கச் சொல்வோம்.

கருடன் : அட, இதுக்கெல்லாம் ஏம்ப்பா அக்கா. அதுவேற எதுக்கெடுத்தாலும் தடை சொல்லும் சனியன் மாதிரி !

பரந்தாமன் : ஏ கருடா! நிதானமா பேசு! எங்க அக்காளைப் பத்தி எதுவும் பேசாதே !

கருடன் : மன்னிச்சிக்கோ, மன்னிச்சுக்க ஒரு டெஸ்ட் பாத்தேன். அக்காகிட்ட தம்பிக்கு எவ்வளவு அன்பு இருக்குன்னு ........