காட்சி 62]
காட்சி 62·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(குமுதா நகருதல்)
[ஒரு வீட்டின் பின்புறம்
அம்மாமி : நன்னாயிருக்குடியம்மா வேலை செய்றது! எங்க வீட்டு சாமானையெல்லாம் நொறுக்கிண்டு போய்டுவே போலிருக்க !... போ போ ! போதும் போதும் உன் வேலையும் நீயும். அதுக்குத்தான் கர்ப்ப ஸ்திரியை வேலைக்கு சேர்க்க வேண்டாம்னேன்.
குமுதா: அம்மா !உங்கள் மகள் மாதிரி நினைச்சு ...
அம்மாமி: மகளாவது மகள்! இங்கதான் ஒன்பதும் பெண்ணா பொறந்து கிடக்கே ! நீவேறயா? போடின்னா போ !