காட்சி 61]

காட்சி 61·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[டைப்ரைட்டிங் ஆபீஸ்

[அங்கே பல கிளர்க்குகள். குமுதாவும் டைப் செய்து கொண்டிருக்கிறாள். எல்லா மேஜையிடமும் கவனித்து வந்த மேனேஜர் குமுதாவுக்கு பின்புறம்

வந்து நிற்கிறார்.குமுதா பாண்டியன் பாண்டியன் என்று அதே வார்த்தையை டைப் செய்து கொண்டிருக்கிறாள்]

மேனேஜர்: ரொம்ப ஒழுங்காயிருக்கு டைப் பண்ற லக்ஷணம்!

(குமுதா திடுக்கிட்டு எழுதல்)

மேனேஜர்: பாண்டியன்! பாண்டியன்! போதும் நீ செஞ்ச வேலை. வெளியே போ!

குமுதா: சார் தயவு செய்து .......

மேனேஜர்: ஊஹும். போன்னா போ !