காட்சி 51] [புண்யகோடி வீடு
காட்சி 51·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
புண்யகோடி : ஆமா ஆமாம்! அது நானேதான் இதுகூடவா சந்தேகம் ... உம் ...இருபது வருஷத்துக்கு முன்னே நான் எப்படியிருந்தேன்னு நீ நினைச்சுப் பாக்குறே ! இருபது வருஷத்துக்கு அப்புறம் நீ எப்படியிருப்பேன்னு நான் நினைச்சுப் பாக்குறேன் ...உம் சராசரங்கள் வரும் சுழன்றே சரடுபோல் அருகாடான்னா .... உம் அதை விடு கழுதை .... (அவளிடம் போய்) அப்பொ நான் போய்ட்டு. வரட்டுமா? போய்ட்டு வரட்டுமான்னேன்... (போய் பிறகு திரும்பி ) கேக்க மறந்தேனே.இன்னைக்கு என்ன சமையல்? இன்னைக்கு என்ன சமையல்னு கேக்கிறேன் ...
(ராதா புண்யகோடியின் தொந்தியைத் தடவிக் காட்டுகிறாள்]
புண்யகோடி: ராதா ! இனிமே இந்தத் தொந்தரவு வேண்டாம். ஆசைக்குக் கல்யாணம்பண்ணி அவஸ்தைபட வேண்டியிருக்கும் ...(பேப்பர் பென்சிலை எடுத்து) இந்தா இந்த பேப்பரை வச்சிக்க, இந்தப் பென்சில் குச்சியை வச்சிக்க. எல்லா விஷயத்துக்கும் எழுதியே காட்டிடு.
(ராதா புரியாமல் விழிக்க)
புண்யகோடி : இனிமே எல்லா விஷயத்துக்கும் எழுதியே காட்டிடு ! போய்ட்டு வரட்டுமா ராதா நான் போய்ட்டு வரட்டுமா அது கெட்டுது போ !... (போகிறான்)