காட்சி 50] [குமுதா மதறாஸ் வீடு : ஹால்
காட்சி 50·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[குமுதா பாண்டியன் இருக்க குண்டுமணி வருதல் ]
பாண்டியன் : குண்டுமணி எல்லாம் பிரின்ட் ஆயிட்டுதா...
குண்டுமணி: ஆயிட்டுதுங்க. இதோ மூணு காப்பி எடுத்தாந்திருக்கேன். (கொடுக்க)
குமுதா: இந்தப் புஸ்தகத்தைப் பார்த்தா பரந்தாமனுக்கு ஆத்திரம் வரும்.
பாண்டியன் : ஆத்திரம் வருவதற்கு இதை எழுதவில்லை. பரந்தாமன் போன்ற போலித் தலைவர்கள் அறிவு பெறுவதற்காக. அப்பாவி மக்களை ஏமாற்றுவதை நிறுத்துவதற்காக. குமுதா! இனியும் இந்த பூமியில் ஏமாளிகளும் இருக்கக் கூடாது ! இளிச்சவாயர்களும் இருக்கக்கூடாது.
குண்டுமணி : இளிச்சவாயர் என்றால் எப்ப பாத்தாலும் சிரிச்சிக்கிட்டே இருக்காங்களே அவங்களாங்க? (குமுதா சிரிப்பு )
பாண்டியன் : இளிச்சவாயர் என்றால் அவர்களல்ல. புரட்டுக்காரர்களின் புன்சிரிப்பிலே புத்தியை பறிகொடுத்து, எந்த இழிவு வந்தாலும் எமக்கு என்னவென்று கவலைப்படாமல், ஏன், எப்படி என்று கேட்க தைரியமில்லாமல் வாயை இறுக மூடிக்கொண்டு கிடக்கிறார்களே அவர்கள் தான் இளிச்சவாயர்கள்!