காட்சி 34]

காட்சி 34·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(கரகோஷம். புண்யகோடிக்கு ஒரே பூரிப்பு)

[பூமாலை பிள்ளைகளுடன்!]

பூமாலை: ஜீவஹிம்சை கூடாதென்றவர்கள் இருவரைச் சொல்லு.

பையன் : புத்தர், காந்தி

பூமாலை: முகுந்தா! மூவேந்தர் யார்?

பையன் : சேரன், சோழன்.... (திணறுவது)

பூமாலை : உம். சொல்லு

பாண்டியன்

(பாண்டியன் என்றதும் அவள் முகம் மாறுகிறது- உதடுகள் முணுமுணுக்கின்றன. பிறகு மாணவ - மாணவிகளிடம்)

பூமாலை: சரி வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு வாங்க

(எல்லோரையும் அனுப்புகிறாள். அவர்கள் போனதும், தோட்டத்துப் பக்கம் போகிறாள்)