காட்சி 29] [கருடன் பதிப்பகம்
காட்சி 29·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பரந்தாமன் வருதல்]
கருடன் : வாப்பா ! இரண்டு மூணு வாரமா ஏக ஜாலியா இருந்திருக்கும் life ..
பரந்தாமன் : பாவம்... சென்னையிலே குடும்பம் அமைத்து என்னை சம்சார சிறையிலே போடலாமென்று துடித்தாள் பாமா... எங்கே போனாளோ என்ன ஆனாளோ!....
கருடன் : ம்... சம்சாரமாவது ஒண்ணாவது மனுஷன் free-யா இருக்கணும், என்னாட்டம். நமக்கு உதாரணமாகத்தானே கடவுள் படைத்திருக்கிறான், மலருக்கு மலர் தாவுகிற......
பையன்: மரத்துக்கு மரம் தாவுகிற மந்தி
கருடன் : டே...
பையன்: மறந்துட்டிங்களோன்னு ஞாபகப்படுத்தினே.
கருடன் : கம்பர் மகன் அம்பிகாபதி! சும்மாயிருடா முந்திரிக்கொட்டை!
(தெருவிலே தொழிலாளர் ஊர்வலம் செல்லும் ஒலி கேட்கிறது.)
## கோஷம்
சிவசக்தி மில் தொழிலாளர் கூலியை உயர்த்து. தொழிலாளர் சம்பளத்தை உயர்த்து.. தொழிலாளர் சம்பளத்தை உயர்த்து.
பரந்தாமன் : என்னடா?
பையன்: நமக்குச் சம்மந்தமில்லை.
கருடன்: நமக்காமில்ல நமக்கு ! இவரும் சேந்துக்கிறாரு விஷயத்தை சொல்லு கழுதை!
பையன் : மில் தொழிலாளிங்க சம்பள உயர்வுக்காக கிளர்ச்சி பண்றாங்க!...
பரந்தாமன் : அப்படியா? அப்ப நமக்கு சம்பந்தமில்லை.
கருடன்: ஏன் இல்லை? எனக்கு ஒரு வழி தோணுது. இந்தக் கிளர்ச்சியை சாதகமாக்கிக்கிட்டு பாட்டாளிகளைப்பத்தி ஒரு புஸ்தகம் எழுதினா இந்தச் சமயம் நல்லா விக்கும்.
பரந்தாமன் : ஆமாம்.... இன்றைக்கே எழுத ஆரம்பிக்கிறேன். பெயர் என்ன வைக்கலாம்—புஸ்தகத்துக்கு... ஆங்...சரி.... பாட்டாளியின் குரல்.
கருடன் : சபாஷ்! பாட்டாளியின் குரல். என்ன மூளை! என்ன மூளை!
பையன் : முதல்ல என் குரலை கொஞ்சம் கவனிங்க!
பரந்தாமன் : என்னடா?
பையன்: எனக்கு சம்பளம்.
கருடன் : (கோபமாய்) டேய் ! மில் தொழிலாளிகளுக்காக புஸ்தகம் எழுதினா...
பையன்: நானும் ஒரு தொழிலாளிதானுங்க!...
கருடன் : பெரிய தொழிலாளி இவுரு ! பரந்தாமா! நீ எழுத ஆரம்பிச்சுடு ! லாபத்திலே உனக்கு கால், எனக்கு முக்கால்.
பையன்: எனக்கு...
கருடன் : அறை ! (அறைதல்)