காட்சி 28] [குமுதா வீடு—சென்னை

காட்சி 28·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[பாண்டியனை நிற்கவைத்து குமுதா போட்டோ எடுக்கிறாள்]

குமுதா: நில்லுங்க சரியா—ஆங்—கொஞ்சம் சிரிங்க... கொஞ்சம் கொஞ்சம்... ஸ்டடி பிளீஸ், ரைட்... தேங்க்ஸ்...

(போட்டோ எடுத்துவிடுகிறாள்)

பாண்டியன்: இங்கே கொடு. நான் உன்னைப் பிடிக்கிறேன்.

குமுதா: என்னாது ..

பாண்டியன் : படம் பிடிக்கிறேங்கிறேன்.

குமுதா: அதானே! (வெட்கமுடன்)

பாண்டியன் : (கேமராவை வாங்கி) ம்... ஸ்டடி பிளீஸ்....

(குமுதா நடராஜர் போல அபிநயம் பிடித்து நிற்கிறாள்)

பாண்டியன் : இது என்னா இது !

குமுதா: சின்னம்மா!

பூமாலை : ஏங்கண்ணு!

(அப்போது பூமாலை வருகிறாள்)

குமுதா: நாங்க தனித்தனியா போட்டோ எடுத்துட்டோம். ரெண்டுபேரும் நிக்கிறோம் நீ எடு!

பூமாலை : ஊஹும் குமுதா! எனக்கு எடுக்கத் தெரியிலே நீயே எடு!

குமுதா: போ சின்னம்மா! (சிணுங்கியபடி கேமராவை வாங்கிக்கொண்டு) சரி சின்னம்மா ! நீங்க ரெண்டுபேரும் நில்லுங்க நான் எடுக்கிறேன். (களங்கமில்லாமல்)

பூமாலை : நானா.

குமுதா : போய் நில்லு சின்னம்மா!

(பூமாலை பாண்டியன் அருகே போய் நிற்கிறாள். குமுதா போட்டோ எடுக்கப் போகிறாள்)

குமுதா: ஸ்டடி பிளீஸ்...

(குண்டுமணியின் சந்தோஷ கூச்சல்—குமுதா நடுங்கியபடி கேமராவைக் கீழே போட்டுவிடுகிறாள்)

பூமாலை : ஏ...என்ன... என்ன?

குண்டுமணி : (பேப்பரைக் காட்டி) குமுதாம்மா பாஸ் ! பாஸ் ! பாஸ்!

குமுதா: பாஸா!

பூமாலை : பாஸ் ! குமுதா நீ கெட்டிக்காரி!

(தழுவிக்கொள்ளுதல்)

பாண்டியன் : குமுதா கங்ராஜுலேஷன்ஸ்...

(இருவரும் கை கொடுக்க முயலல்)

குண்டுமணி : (பத்திரிகையைக் காட்டி) இந்த பாருங்க நம்பரு. பதினாறு இருபத்தினாலு..

பாண்டியன்: இருபத்தினாலு... அட என் வயசுகூட இருபத்தினாலுதான்.

குமுதா: என் வயசு பதினாறுதான்.

குண்டுமணி : பொருத்தமான நம்பருதான்.

பூமாலை : (அதட்டல்) ஏய்....சும்மா இரு ...

குண்டுமணி : இல்லிங்க. குமுதாம்மா எண்ணும் பதினாறு வயசா மார்க்கண்டி மாதிரி இருக்கணுங்கிறேன்.

(எல்லோரும் சிரிப்பு)

பூமாலை : அப்ப ஊருக்குப் புறப்படலாமா!

குமுதா : அவர்...

குண்டுமணி : அவரைப்பத்தி நீங்க கவலைப்படவேண்டீதில்லைம்மா. இனிமே நம்ப விரட்டினாகூட அவர் நம்பளைவிட்டுப் போமாட்டாரு !