காட்சி 27] [குமுதா வீடு—சென்னை
காட்சி 27·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
குமுதா: குண்டுமணி ! இன்னுமா டீ தயாராகவில்லை?
(கீழே இறங்கி வருகிறாள்—பூமாலை அங்கு வருகிறாள்)
குமுதா: சின்னம்மா ! நீ அவருக்கு டீ அனுப்பச்சொல்லு. நான் போயி கேமராவுக்கு பிலிம் வாங்கிட்டு வர்றேன்...
(குண்டுமணி டீ கொண்டுவருதல்)
பூமாலை: குண்டுமணி இரு... நான் கொண்டுபோறேன் டீயை. நீ போய் வேலையைப் பாரு
குண்டுமணி : சரிம்மா...
(வாங்கிக்கொண்டு மாடிக்குப் போகிறாள்)
குண்டுமணி: (தனக்குள்) பாண்டியனுக்கு உபசாரம் பண்றதுன்னா அம்மா முன்னாடி நிக்கிறாங்களே என்னா விஷயம். ஆங் சேசே ! அம்மா நல்லவங்க... ம் .. யாரு கண்டா. அப்பேர்பட்ட (சந்தேகம்) எப்பேர்பட்ட.. சரிசரி வேலைக்காரனுக்கு என்னா இதெல்லாம்...