காட்சி 26]

காட்சி 26·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

(பாமா ஓடுகிறாள்)

[பாமா பைத்தியக்காரி போலானாள். பரிதாபத்திற்குரியவளானாள். ஓடினாள், எங்கேயோ ஓடினாள், ஒரு முடிவு தேடி ஓடினாள். வழவழப்பான தார் ரோடு, வஞ்சிக்கப்பட்ட அவளுக்குப் பாதை காட்ட முடியவில்லை. மாலுமிகளுக்கு வழி காட்டும் தீபஸ்தம்பம் திக்கற்ற அவளுக்கு திசை காட்ட முடியவில்லை. கொந்தளிக்கும் கடல் குமுறி எழும் அவள் உள்ளத்தோடு போட்டிபோட முடியவில்லை. உறுமு-

வது புலியல்ல. உலகம் உலகம்! அவள் வெறுத்துவிட்டு வந்த உற்றார் உறவினர் தாய் தந்தையர் வாழும் உலகம் ! அந்த உலகத்தின் முகத்திலே இனி அவள் விழிக்க முடியாது ! விழிக்க முடியாது ! விழிக்கவே முடியாது!]

(கடலோரத்தில் விழுகிறாள்)