காட்சி 22] [ஹோட்டலறை

காட்சி 22·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

பாமா : எத்தனை நாளைக்கு ஹோட்டலில் தங்கியிருப்பது. சீக்கிரம் ஒரு வீடு பாருங்கள்.

பரந்தாமன் : வீடு பார்ப்பது இருக்கட்டும்.. வா இன்றைக்காவது ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம்.

பாமா: ஊஹும்... முதலில் குடும்பம் ஆரம்பிக்க வேண்டும்.

பரந்தாமன் : ஆரம்பிப்போமே. ஏன் அவசரப்படுகிறாய். குடும்பத்துக்கும் சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்கும் என்ன சம்பந்தம்?

பாமா: சென்னையில் என்ன இருக்கிறது?

பரந்தாமன் : சென்னையில் என்ன இருக்கிறதா? கண்காட்சி சாலையைப்பற்றி கதை கதையாகச் சொல்கிறார்கள். கதிரவனைப் பழிக்குமாம் கலங்கரை விளக்கம். மிருகக் காட்சி சாலையும், மெரினா கடற்கரையும் பார்க்காத கண்கள் பாபக் கண்களாம். ம்...புறப்படு ! அன்புக்கரசி, அழகு மணி மாளிகையின் அலங்காரத் திருவுருவே. அழித்தெழுதா சித்திரமே. புறப்படு.

(புறப்படுதல்)