காட்சி 21] [சென்னை குமுதா வீடு—பகல்

காட்சி 21·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

சமையல்காரன்: அம்மா ! சின்னம்மா வர்றாங்க!

குமுதா: சின்னம்மா!

(குமுதா ஓடி வருகிறாள்)

பூமாலை: குமுதா! (தழுவிக் கொள்ளல்)

குமுதா: (பாண்டியனைப் பார்த்து) சின்னம்மா இவுரு ..

பூமாலை: சொன்னால் தெரியுமா உனக்கு ?

குமுதா: சொல்லாமலே தெரியும். “வாழு, வாழ விடு” மன்னிக்கவும். தங்கள் பெயர் பாண்டியன்தானே!

பாண்டியன் : ஆமாம்.

சமையல்காரன்: யாருங்க. அந்த கோவலனைக் கொன்னாரே அந்தப் பாண்டியனா ..

குண்டுமணி: ஆக்கும்... சௌந்தர பாண்டியன். ஆளைப்பாரு !...

குமுதா: வாருங்கள் முதலில் காபி சாப்பிடுவோம்....