காட்சி 18] [பாண்டியன் அறை
காட்சி 18·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பாண்டியன் பாமாவை மணக்கப்போகிற மகிழ்ச்சியில் இருக்கிறான். வெளியிலே மாப்பிள்ளை ஊர்வலத்துக்கு ஏற்பாடு நடக்கிறது. உள்ளே]
புண்யகோடி : சீக்கிரம் புறப்படுடா தம்பி ! எல்லாம் தயாரா இருக்கு.
பாண்டியன் : ஊர்வலம் வேணுமாப்பா? எனக்கென்னமோ பிடிக்கலை
புண்யகோடி : அது கெட்டுது போ ! ஊர்வலமே வேண்டாமா ! நம்ப என்ன அவாளை இவாளை கூப்பிட்டு கச்சேரியா வைக்கப் போறோம். கொஞ்சம் சிறப்பா, வெறும் மாப்பிள்ளை ஊர்வலம் கூடவா கூடாது—பெண் உன் பக்கத்திலே இருக்கப் போறதில்லை நீ ஏன் வெட்கப் படுறே.
(பாண்டு வாத்யம் திடீரென நிற்கிறது. ஒருவன் புண்யகோடியின் காதில் பெண் ஓடிவிட்டாள் என்ற செய்தியைக் கூறுதல். பாண்டியன் திகைப்பு)