காட்சி 19] [பூமாலை ஹால்—பகல்
காட்சி 19·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[பூமாலை ஊருக்குப் புறப்பட ஏற்பாடு செய்கிறாள்—அவளிடம் பாடம் கற்கும் ஒரு பெண் வந்து]
பெண் : பட்டணத்துக்கு ஏம்மா போறீங்க...
பூமாலை : குமுதாவுக்கு பரிக்ஷை முடிவு ரெண்டுநாளில் தெரிந்துவிடும். அவளை அழைத்து வருவதற்காகப் போகிறேன்
குண்டுமணி: (வந்தபடி) அம்மா! அம்மா! விஷயம் தெரியுமா! நம்ப சின்ன எஜமானுக்குப் பாத்த பெண்ணு ...
பூமாலை: இன்னைக்கு கல்யாணம் அதுக்கு என்ன?
குண்டுமணி: பெண்ணு நேத்தி ராத்திரி ஓடிட்டுதாம்!
பூமாலை: அப்படியா! (யோசனை) ம்... பரந்தாமன் எங்கே ?
குண்டுமணி : அவரு...அவரு...ம்...அவருகூட மெட்ராஸ் போகணும்னு கருடன் கிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு.
பூமாலை : (சிந்தனை) ம்... சரி புறப்படு. ரயிலுக்கு நேரமாச்சு.