காட்சி 13]

காட்சி 13·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[கருடன் பதிப்பகம்

பரந்தாமன்: (வாழு புத்தகத்தைக் காட்டியபடி)கருடா! புத்தகம் எப்படி?

கருடன்: ரொம்ப பிரமாதம்.

பையன் : இந்த புஸ்தகத்திலே ரொம்ப நல்லாயிருக்கிறது....

கருடன் : என்னடா?

பையன் : மேல் அட்டைங்க.

கருடன் : சீ | அட்டை மாத்திரந்தான் நல்லா இருக்கா? அச்சு கூடத்தான் மணி மணியா இருக்கு.

பரந்தாமன் : கருடா / அச்சு எப்படி, அட்டை எப்படி என்று விமர்சனம் கேட்கவில்லை : அறிவுரைகள் தந்திருக்கிறேனே, அது எப்படி என்றுதான்.

கருடன் : ஆஹா / அதைக் கேக்கணுமா ...

(புத்தகத்தைப் பிரித்துப் பாடல்)