காட்சி 14]
காட்சி 14·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[ஸ்டேஜ்
[ஸ்டேஜில் பாட்டு. பாட்டு முடிந்ததும் பரந்தாமனும் கருடனும் ஆத்திரத்துடன் வெளியே போகிறார்கள்]
பாண்டியன் : தோழர்களே! வணக்கம் / ஒரு சில எழுத்தாளர்கள் கிளம்பியிருக்கிறார்கள் ஆபாச நடையிலே, அர்த்தமற்ற அடுக்குத் தொடரிலே தேவையற்ற கேடுதரும் கருத்துக்களை நாட்டில் பரப்புவதற்காகவே. சமீபத்தில் 'வாழு' என்ற புத்தகம் வெளியாகியிருக்கிறது. மனிதன் தன்னுடைய லீலா விநோதங்களுக்காகவே உலகத்தில் அவதரிக்கிறான் என்று அதன் ஆசிரியர் கூறுகிறார். வாழு என்ற கொள்கையும்,வாழாதே, வாழ்வாவது மாயம் என்ற வரட்டுத் தத்துவத்தையும் தவறு என்று எடுத்துக்காட்டவே வாழு வாழ விடு என்ற நூலை எழுதினேன். அதை நாடகமாகவும் ஆக்கினேன்.'வாழு' என்பது சுய நலம். 'வாழாதே' என்பது அறிவீனம். 'வாழு வாழ விடு' என்பது பகுத்தறிவு. இந்த உண்மை உங்கள் ஆதரவால் வெற்றிபெற வேண்டும். நாடகத்திற்கு வந்துள்ள அனைவருக்கும் என் நன்றி வணக்கம்.