காட்சி 7] [பூமாலை வீடு-பகல்

காட்சி 7·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[உள்ளே பெண்கள் பலர் திருமண வேளைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.குமுதா வரல்- பூமாலை ஆவலுடன் ஓடிச்சென்று]

பூமாலை: குமுதா!

குமுதா: சின்னம்மா! (இருவரும் தழுவல்)

பூமாலை: ஏம்மா இவ்வளவு தாமதம்?

குமுதா: பரீட்சை சின்னம்மா. உடனே வரமுடியிலே...

பூமாலை : உட்காரு குமுதா. தம்பிக்கு உன்னை கல்யாணம் செஞ்சு வச்சு வீட்டோட இருப்பேன்னு நெனச்சேன்...

குண்டுமணி : அதுக்குள்ளத்தான் அவரு காதல் திருமணம் பண்ணிட்டாரே.

குமுதா: ஏய் குண்டுமணி.

(பரந்தாமன் வருகை)

பரந்தாமன் : அடடே ! குமுதா தேவி எப்போது வந்தார்கள்?

குமுதா: மாமா, மாப்பிள்ளை முறுக்கிலேயே இருக்காரே! ஏன் மாமா, மாமி சிகப்பா கருப்பா?

பரந்தாமன் : அய்ய... படிச்ச பெண்ணுக்கு இதுகூட தெரியிலேயே. ஒரு பெண்ணு சிகப்பு நிறமாயிருந்த எவனாவது விரும்புவானா? ரத்தம், குங்குமம் இதெல்லாம் சிகப்பு - இந்த நிறத்தை எவன் தொடுவான். இனிமேல் இப்படிக் கேளு. எழுமிச்சம்பழ நிறமா,நாகற்பழ நிறமா,அல்லது இரண்டுங் கலந்ததா?

(குமுதா சிரிக்கிறாள்)

குமுதா: கல்யாண உற்சாகத்திலே மாமாவுக்கு கவிதைகளால்ல ஊறுது !

குண்டுமணி: அதுவும் கலர் கவிதைகளால்ல ஊறுது ! (சிரிப்பு)