காட்சி 6] [குளக்கரையோரமுள்ள தென்னஞ்சோலை-பகல்

காட்சி 6·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[பாமா பாடிமுடிந்ததும் குடத்தை எடுத்துக்கொண்டு போகிறாள் - மரத்தின் மேலே இருந்த பரந்தாமன் குடத்தின் கழுத்தில் சுருக்குப் போட்டு இழுக்கிறான். பாமா மேலே பார்த்து -]

பாமா: இது என்னா வேலை... (சிரித்தபடி பரந்தாமன் கீழே வருதல்) பாமா: குடத்திலே விழுந்த சுருக்கு தவறி என் கழுத்திலே விழுந்தது, பரந்தாமன்: கழுத்திலேயுந்தான் சுருக்குப் போடப் ..... பாமா: என்னாது .. பரந்தாமன்: பயப்படாதே ! இந்தக் கயிற்றால் அல்ல. உன் மரகதமணிக் கழுத்திலே மஞ்சள் தோய்ந்த மாங்கல்யக் கயிற்றால். (பாமா வெட்கம்) பாமா! சொன்னது சரிதானே ! அட சொல்லு (பாமா புன்னகை )ஆகா புயலை அடக்கும் தென்றல்,எரிமலையை அணைக்கின்ற பனிக்கட்டி, கேள்விப்பட்டதே இல்லை நான் !. ஆனால் அந்தப் புதுமையான சக்தியை உன்னுடைய ஒரு புன்னகையிலேயே காணமுடிகிறது. பாமா: இதெல்லாம் வெறும் வர்ணனையாகப் போய்விடாதே? பரந்தாமன்: ஏன் சந்தேகம் !. (தோளில் கை வைத்து) நேற்று தானே அறிமுகமானான். இன்று தொட்டு விளையாடுகிறான், நாளை ஓடிவிடுவானோ என்று அஞ்சுகிறாயா? கொஞ்சு மொழியாளே! கூர்ந்து கவனிக்கவில்லையா நீ, இல்லற ஜோதியிலே என்ன எழுதியிருக்கிறேனென்று . பாமா : எழுதியபடியே நடப்பீர்களா? பரந்தாமன் : (அலுத்தபடி) பெண்களே இப்படித்தான் சந்தேகப் பிராணிகள். பாமா : இல்லை...யில்லை ... (அவன் முகத்தைத்திருப்பி ) இங்கு பாருங்கள் ... பரந்தாமன் : பாமா! கண்ணே! (நெருங்கல்) பாமா: ஊஹும்... எல்லாம் திருமணம் ஆனபிறகு...

பரந்தாமன் : திருமணந்தான் ஆகப்போகிறதே ! பாமா : திருமணம். நான் பாக்யசாலி.