காட்சி 4] [பூமாலை வீடு ஹால்
காட்சி 4·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
[சாப்பிட்டான கப் சாசர்களை ஒரு பெண் எடுத்துப் போகிறாள்]
குணரத்தனம்: அப்ப சந்தோஷம். ஏழாந்தேதி ஒரு நல்ல நாள் இருக்கு ... ... ...
பூமாலை: நாள் எதா இருந்தா என்ன!
குணரத்தனம்: இல்லம்மா! எனக்கு நாள் நக்ஷத்திரத்திலே கொஞ்சம் நம்பிக்கை.
பூமாலை: சரி சரி ... ... அதனால் என்ன!
தங்கம்: நீ ஏம்மா கல்யாணம் பண்ணிக்காம ... ... ...
பூமாலை: இந்தக் குடும்பத்து பொறுப்பாளியே நான்தானே. தம்பி செல்வமாக வளர்ந்தவன், குடும்ப கஷ்டத்தை அவனுக்கு கொடுக்கக் கூடாதுன்னு அப்பா அம்மா உத்தரவு. அக்கா மகள், தாய் தந்தை இல்லாதவள் சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறாள், அவளுக்கு நான்தான் துணை.
குணரத்தனம்: இப்படி எல்லோருக்கும் அம்மா துணையா இருக்கிற தாலதான் அவங்க வாழ்க்கைத் துணைவரை வீட்டோட இருக்கிறவரா பாக்கிறாங்க!...... ...
தங்கம்: ஏம்பா....அது மாதிரி புருஷன் கிடைக்காது ... லக்ஷிமி மாதிரி இருக்குது பொண்ணு!
(பரந்தாமன் வருகிறான் குளித்து டிரஸ்.செய்துகொண்டு)
பூமாலை: வா தம்பி! இவங்கள்ளாம் தெரியுமா? (பரந்தாமன் முழித்தல்) ஓ! இவுங்க பெண்ணைமாத்திரந்தான் தெரியும் போலிருக்கு ... ... பாமாவோட பெற்றோர்!.
பரந்தாமன்: ஒகோ! நமஸ்காரம்!
பூமாலை: கல்யாணம் நிச்சயம் பண்ண வந்திருக்காங்க! என்ன ... ... சம்மதந்தானே உனக்கு ... ... ...
(பரந்தாமன் மௌனம், நாணம்)
குணரத்தனம்: என்ன கேக்கிறீங்க இதைப்போயி! வாழைப்பழம் வேண்டாங்கிற குழந்தை உண்டாங்கிறேன்.
பூமாலை: என்ன பரந்தாமா!
பரந்தாமன்: சரிக்கா!
குணரத்தனம்: அப்பசரி. நாங்க வரோம். சந்தோஷம். ஆக வேண்டியதைக் கவனிப்போம்.