லீலா!...லாலீ!...அது போலீ!...
பாட்டு 8·11-இல்
பிற்கால தொகுப்புச் சான்றின்படி இப்பாடல் கலைஞருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இது மூல நூலின் தனி நிலைப் பாடலாசிரியப் பொறுப்பன்று.
லீலா!...லாலீ!...அது போலீ!... கண்ணற்ற தகப்பனுக்கு பெண்ணாகப் பிறந்தவளே! எண்ணற்ற பொய் சொல்லி என்னையே மாற்றிய என் தங்கமே! பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் இருண்டு போகுமோ? மியாவ் மியாவ் வானை நோக்கித் திரையைப் போட்டால் வட்ட நிலாவும் மறைந்து போகுமோ (கண்)
கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு—இந்தக் கட்டிக் கரும்பின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?...ஆ! (கண்)
வசனம்: ராணி
நான் ஒண்ணும் பொய் சொல்லலே எல்லாம் உண்மை தான்...
பாட்டு: ராஜா
அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே! அநியாயமாய் உண்மை சொல்வதிலே உனக்கு அவனியிலே நிகர்யாரு கண்ணே!
வசனம்: ராணி
ராணி: ராஜா! ராஜா: ராணி! ராணி: ஆ!...(வியப்பு)
பாட்டு: ராஜா
சீட்டுக் கட்டு ராணி போல சிக்கிவிட்டாய் பெண்மயிலே வாட்டமே இல்லாமலே வாழலாம் பூங்குயிலே! கிளாவர் ராணி! உனக்கு என்ன வேணுமின்னு கேளு... ஆட்டின் ராணிபோல ஆடு டைமன் ராணிபோல ஆடு அட இஸ்பேட் ராணி! ஏனிந்த சோகமோ? என் மேல் என்ன கோபமோ? உண்மை சொன்ன பாபமோ? உன் மனதில் என்ன தாபமோ?