வாங்க...வாங்க...வாங்க...எல்லோரும் இங்கே வாங்க
பாட்டு 3·11-இல்
பிற்கால தொகுப்புச் சான்றின்படி இப்பாடல் கலைஞருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இது மூல நூலின் தனி நிலைப் பாடலாசிரியப் பொறுப்பன்று.
ராணி
வாங்க...வாங்க...வாங்க...எல்லோரும் இங்கே வாங்க டிக்கெட்டு வாங்க...வாங்க...இன்றிரவு மிக நன்றிரவு இணையில்லாத இன்ப இரவு
நிர். 1. ஒருவன்
தரை ஒண்ணு!
ராணி
அரை ரூபா!
அவன்
கொடு கொடு இந்தா!
ராணி
தரை அரை ரூபா!...கரை படிந்த தரை அரை ரூபா ரத்தக் கரை படிந்த தரை அரை ரூபா வெற்றிலை பாக்கு கரை படிந்த தரை அரை ரூபா (இன்றிரவு) (இன்றிரவு)
நிர். 2. ஒருவன்
ஏம்மா இன்னிக்கு என்ன ட்ராமா?
ராணி
அட வெங்கட்ராமா க்யூவிலே நில்லு!
அவன்
எப்படித் தெரியும் என்பேரு? செப்படி வித்தை கற்றவளோ?
ராணி
தரை அரை ரூபா...பெஞ்சு ஒண்ணு பேக் பெஞ்சு மூணு...ஏ...காலி! காலி...நாற்காலி அஞ்சு ரூபா...
நிர். 3. ஒருவன்
கொஞ்ச ரூபா சொல்லு
ராணி
ஆ!
அவன்
கொஞ்ச ரூபா சொல்லம்மா...கோகிலவாணி அம்மா கோகிலவாணி அம்மா கோகிலவாணி
ராணி
வஞ்சகனே போடா!...ஏடா...மூடா... வீணே சாகாதேடா...
அவன்
ஆ!
ராணி
எங்க நாடகத்தில் இந்த வசனங்களை கேட்க கொஞ்ச ரூபாயா? அஞ்சு ரூபாதா! அழகான நாடகம் எழிலான காட்சிகள் அனல் வீசும் பேச்சுகள்...ஆடல்...பாடல் ஊடல்...கூடல் எல்லாம் காண இங்கே வாங்க...
ராணி
வாங்க டிக்கெட்டு வாங்க வாங்க மூணு வயதுக்கு மேல் முழு சார்ஜு இடம்மாறி உட்கார்ந்தால் டபுள் சார்ஜு டர்னிங் சீனில் அடிக்கக்கூடாது டார்ச்சு (மூணு)
கிழவன்
ஐம்பத்து மூணுக்கு?
ராணி
ஈஸி சேர்!...
ஒரு பெண்
ஏம்மா! பெண்களுக்குத் தனி இடம் உண்டா?
ராணி
பிள்ளைகள் போட ஏணையும் உண்டு பீடா சிகரெட் பாக்கு வெத்திலை சோடா கலர் ஆரஞ்சு
குள்ளன்
ப்ரீயா?
ராணி
அட.. ட்ரீயோ! ட்ரீயோ டேயன்னா! முட்டன்னா டாவன்னா ள்ளன்னா போய்யா (மூணு)
நிர். 4 ஒருவன்
ஏம்மா அரை டிக்கட் உண்டா?
ராணி
யப்பா...உமக்கு முழு டிக்கட்டும் இல்லே!
அவன்
ஏனாம்?
ராணி
ஹவுஸ் புல்!