சிரிப்பு...... இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொருப்பு!...

பாட்டு 4·11-இல்

கிடைக்கும் மூலச் சான்றின்படி இப்பாடலுக்குத் தனி நிலைப் பாடலாசிரியர் நிறுவப்படவில்லை.

சிரிப்பு...... இதன் சிறப்பை சீர்தூக்கி பார்ப்பதே நமது பொருப்பு!... கறுப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும் கண்ணாடி சிறப்பு! மனம் இது களையை நீக்கி கவலையைப் போக்கி மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை புரிவது சிரிப்பு! இதைத் துணையாய்க் கொள்ளும் மக்களின் முகத்தில் துலங்கிடும் தனி செழிப்பு!

பாதையில் போகும் பெண்ணைப் பார்த்துப் பல்லிளிப்பதும் ஒரு வகைச் சிரிப்பு அதன் பலனாய் உடனே பரிசாய் கிடைப்பது காதறுந்த பழஞ் செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு!—வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு! இது—அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு! இது—அடங்கி நடப்பவன் அசட்டுச் சிரிப்பு! இது—சதிகாரர்களின் சாகசச் சிரிப்பு! இது—சங்கீதச் சிரிப்பு!