காணாத இன்பமெல்லாம் கண்டிடலாம் இங்கே

பாட்டு 2·11-இல்

கிடைக்கும் மூலச் சான்றின்படி இப்பாடலுக்குத் தனி நிலைப் பாடலாசிரியர் நிறுவப்படவில்லை.

கீதா

காணாத இன்பமெல்லாம் கண்டிடலாம் இங்கே காண்பதும் உண்மை தானுங்க எல்லாம் உண்மை தானுங்க—எங்கும் (கா)

பாபு

அழகோடு உறவாடும் மலர் நாணும் மேனி இசை பாடும் வாணி வா என் கண்மணி

கீதா

ஆஹா ஆசை பாருங்க ஆஹா ஆசை பாரு அதுக்கு வேறு ஆளைப்பாரு நீதான்...

பாபு

சாக சந் தானா ஓகோ எல்லாம் வேஷந்தானா

கீதா

காண்பதும் உண்மை தானுங்க எல்லாம் உண்மை தானுங்க (எங்கும்)

கீதா

என்னைப்பாருங்க என் கண்ணைப் பாருங்க பெண்களில் என்னைப்போலே பேரழகி இல்லீங்க!

பாபு

ஆமாம் பூங்கொடி அலங்காரப் பொன்முடி பாடும் குயிலும் நீ பவனி வரும் தென்றல் நீ

கீதா

ஓடும் உயிரோட்டம் நான் ஓடும் உயிரோட்டம் ஒளி வீசும் புதுமை நிலா நானே கயல்விழி மானே

பாபு

வாழ்வில் உன்னால் இன்பம் தானே

கீதா

காண்பதும் உண்மை தானுங்க—எங்கும் (கா)