ஆனந்த நிலை பெறுவோம்—எல்லோரும்
பாட்டு 1·11-இல்
கிடைக்கும் மூலச் சான்றின்படி இப்பாடலுக்குத் தனி நிலைப் பாடலாசிரியர் நிறுவப்படவில்லை.
(1) ஆனந்த நிலை பெறுவோம்—எல்லோரும் அன்புடனே சமாதானம் காணுவோம் (ஆ)
வீணான பேதங்களும்—பகை விளையும் பொறாமைகளும்—நெஞ்சில் வீணான பேதங்களும்—பகை விளையும் பொறாமைகளும்—புவி தனைநீங்கியே—சாந்தி தழைத்தோங்கியே (ஆ)
சாந்தம் சமரசம் போல் இணையாகவே வாழ்ந்திடும் மாந்தரின் இல்லறம் தன்னிலே
தீதான சந்தேகமே—உரு வானால் எந்நாளிலுமே—பெரும் தீதான சந்தேகமே—உரு வானால் எந்நாளிலுமே—இன்பம் காணாமலே—வாழ்வு வீணாகுமே (ஆ)