களஞ்சியப் பகுதி 57

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— சம: இப்ப புரிஞ்சுதா ராணிக்கு உயிர் வந்த ரகசியம்...? ஞான: எப்படியோ என் ராணி பிழைச்சிடிச்சி.. ராணி: அப்பா... ஞான: ராணி... ராணி: அப்பா! நான் செய்த குற்றங்களை யெல்லாம் மன்னித்து விடுங்கள்... (காலில் விழுகிறாள்) ஞான: எழுந்திரிம்மா...இந்த தள்ளாத வயசுலே என்னை எங்க, தனியா தவிக்கவிட்டுட்டு போயிடுவியோன்னு நெனைச்சேன்... சம: இப்பத்தான் எல்லாம்நல்லாவே முடிஞ்சுபோச்சே... ராணி: உங்க குடும்பத்திலும் சச்சரவு ஏற்படவும் நான் தான் காரணமா இருந்தேன்—நீங்களும் மன்னிச்சுடுங்க. சம: மறப்போம்; மன்னிப்போம்! ராஜா: ராணி, நீ விழவேண்டிய காலு இன்னும் ஒண்ணு பாக்கியிருக்கு. இந்தம்மாதான் உன் மேலே ரொம்ப கோபமாயிருக்காங்க. இதபாரு மொதல்ல, அவுங்க கால்ல விழு!... சாந்தம்மா: மகராசியா இரும்மா!...காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்... சம: ஹீ...ஹீ...அதை நீ சொல்லிட்டியா?...நான் சொல்லலாம்னு இருந்தேன்...சரி; குறள் எல்லாருக்கும் பொது...விடு. (சத்தம் கேட்கவே) யாரது...என்னா? (கரண்ட், சங்கரன், கண்ணம்மா மூவரும் வருதல்.) கரண்ட்: ஆகாகா—தகராறு! பெரிய தகராறு...பெரிய தகராறு. சம...ஏய்...ஏய்...என்னப்பா என்ன தகராறு...? கரண்ட்: காதலிச்சாச்சு...யாரு மொதல்ல மாலை போடறதுன்னு தகராறு! சம: காதலிச்சாச்சுல்ல. அப்ப ‘கேப்’ விடப்புடாது! இந்த விஷயத்திலே லேட் பண்ணினா அப்புறம் அது விஷம் வரையிலும் போயிடும். மொதல்ல மாலையைப் போடு. (கரண்ட் கழுத்தை நீட்டுகிறான்) சங்: நானுங்க... சம: இந்தா பொண்ணு இங்கவா! இவனா?... (ஆமாம் என்று தலையசைக்க) ஏய்! கொடு இப்படி. ஆளைப்பாரு...போடுங்க... ராஜா: அப்ப சரி...சரி. எல்லாம் நல்லவிதமா முடிஞ்சுது. சம: ஆமா, நல்லவிதமா முடிஞ்சுது. ராஜா: அப்ப நீங்களெல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக்கிறீங்களா? சம: ம்...புரிஞ்சுபோச்சு. நாங்க வர்ரோம்.