களஞ்சியப் பகுதி 58
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
★ தோட்டம் ★ ராணி: கையை விடுங்கள் ராஜா... ராஜா: கைவிட மாட்டேன் கண்ணே!...என் இதயத்தின் வீதியிலே ஜோதி விளக்காக உன்னை ஏற்றி வைத்திருக்கிறேன்...குறும்புத்தனத்திற்குப் பெயர்போன உன் நீலக் குறு நயனங்கள், காதல் பாஷை பேசுவதை என் இதயத்தின் காதுகளால் கேட்க முடிகிறது... மாதுளையின் நிறங் காட்டும் உன் மாணிக்க இதழ்கள், உன் மனதைத் திறந்து காட்டுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. அந்தி வானத்தின் சிகப்பு காட்டும் உன் கன்னக் கதுப்புகளிலே தோன்றும் மின்னலிலே உன் நெஞ்சின் மென்மை தெரிகிறது...எனக்கு சோதனை போதும் சுந்தரி... ராணி: போங்க ராஜா... ராஜா: ராணி! ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். எதை மறைத்தாலும் மறைக்கலாம், ஆனால் இந்தக் காதல் இருக்கிறதே அதை மட்டும் என்றுமே மறைக்க முடியாது...தெரியுமா? (இருவரும் பாடுகிறார்கள்) நலம் வாழ்க! —★— அன்பு அச்சகம், மதுரை:-- 56