களஞ்சியப் பகுதி 56
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
(முன்) (ராணி விஷம் குடிக்கப் போகிறாள். சமரசம் வருகிறார்.) சம: ராணி...ராணி...என்ன இது... ராணி: என்னை சாக விடுங்கள்...நான் இனிமேல் இந்த உலகத்தில் வாழ்ந்து பயனென்ன? நான் வாழ முடியாதவள்...வாழக் கூடாதவள்... சம: ராணி, நான் வாழவைக்கிறேன். இந்தா பாரு! வாழ்க்கையிலே தோல்வியடைஞ்சவங்கெல்லாம்—தற்கொலை பண்ணிக்க ஆரம்பிச்சா...உலகத்திலே...முக்கால்வாசி ஜனத்தொகை எப்பவோ காலியா போயிருக்கும்...கவலைப்படாதே— ராணி: வேண்டாம்... சம: அய்யய்யோ! வேண்டாம், நான் சொல்றதைக்கேளு...கதவை தாப்பாபோட்டுட்டு விஷம் சாப்பிட்டுவிட்டு செத்தது மாதிரி படுத்துகிட. பாக்கியை நான் பாத்துக்கிறேன்...உம்...உடனே!