களஞ்சியப் பகுதி 35

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— ராணி: என்ன கரண்ட், முதலாளி எங்கே இன்னும் காணோம்? ராஜா: (வந்து கொண்டே) ஏன் லீலா, எனக்கு ஆயுசு நூறு போலிருக்கு! ராணி: என்ன இது, கையிலே கட்டு? ராஜா: அது...கடி... கரண்ட்: உம்...தெரியாதா உங்களுக்கு? நேத்து ராத்திரி நம்ப சாருக்கும் பாபுவுக்கும் 'டெரிபுள் பயிட்.' ஹாம்...பயிட்டுன்னா பயிட்டு டைகர் ஓல்டன் பயிட்டாம்! ராஜா: டேய்! தமிழ்லே சொல்லித் தொலையேன், சண்டைன்னு! ராணி: ஆ! பேப்பர்ல ஒண்ணும் சேதி வர்லியே...! ராஜா: சருதான்! இது என்ன, உலகமகாயுத்தமா நடந்து போச்சு, பத்திரிகையிலே வர்ரதுக்கு? கர: ஆ...இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம் போடறதுக்குக்கூட பத்திரிக்கை இருக்கு சார்...இப்பவேண்ணா நான் போயி நியூஸ் கொடுத்துட்டு வரட்டுமா? ராஜா: யப்பா, கொஞ்சம் சும்மா இரு! அந்த மாதிரி விளம்பரம் நமக்குத் தேவையில்லை. ராணி: ஆமாம்; பாபு ஒங்கிட்ட ஏன் அனாவசியமா சண்டைக்கு வந்தான்? ராஜா: ஹி...ஹி...என்ன இப்படி கேக்கிற, கடிக்கப் போற நாயி நான் கடிக்கப் போறேம்பான்னு சொல்லிபுட்டா கடிக்குது? ஊர்ல ஒலகத்திலே நடக்கிற சச்சரவெல்லாம்... காரண காரியத்தோடவா நடக்குது? அதுமாதிரி ஏதோ...சண்டைக்கு வந்தான்; செமத்தியா வாங்கிகிட்டு போனான்! ராணி: நீங்களா அடிச்சீங்க? ராசா: ஊம்...நான் அடிப்பனா? நான் அடிச்சா அவன் தாங்குவானா? உடஞ்சிட மாட்டான்...என்னை காப்பாத்துறதுக்காக ஒரு பையன் ஓடிவந்தான்...ஆ...அடிச்சான் பாரு...அடின்னா அடி...ஒங்க ஊட்டு அடி...எங்க ஊட்டு அடில்ல...அப்படி ஒரு அடிச்சான்! உம்— கர: அடேயப்பா! பெரிய பயில்வான் போலிருக்கு! ராசா: உம்...பையன்...சின்னப் பையன், ஆனா; அந்தப் பையனைப் பார்த்தா பொம்பளைன்னுதான் சொல்லணும், லீலா! ராணி: (திடுக்கிட்டு) என்னாது? ராசா: ஆமாம், அவ்வளவு எளிய மனசு...அவ்வளவு எளிய மனசு! பாவம், அந்தப் பையனுக்கு, ஒரு வயசான குருட்டுத் தகப்பனாரு—குடும்பப்பொறுப்பு பூரா அந்தப்பையன் தலைமேலேதான் போல இருக்கு! கர: நல்லவேளை, கடைசி காலத்திலே அந்தக் குருட்டுக் கிழவனுக்கு உபகாரம் செய்ய, ஒரு ஆம்பளைப் பையனாவது பிறந்தானே...அதும் பெண்ணா பிறக்காம! ராசா: ஏன்டா, பொண்ணாப் பொறந்தா என்னா? பெண்களேயே பெரிய பெரிய ராணியெல்லாம் இல்லியா...ஏன் லீலா? ராணி: ஆமாம்! ராசா: ஜான்ஸி ராணி...அந்த ராணி...இந்த ராணி... ராணி: இந்தா கரண்ட்! நாலு ரேடியோ வேணும்னு ஆடர் வந்துதே, அதெல்லாம் எடுத்துக்கொண்டு கொடுத்தாச்சா? கர: ஓ குடுத்தாச்சி! ராசா: ஆகா!...ரேடியோன்னோன்ன எனக்கு ஞாபகம் வந்தது. லீலா, அந்தப் பையன் செய்த உபகாரத்துக்காக அவனுக்குக்கூட ஒரு ரேடியோ பிரசண்டேஷன் செய்யலாம்னு இருக்கேன்! ராணி: கொடுக்க வேண்டியதுதான்... ராசா: என்ன லீலா, டைம் ஆயிடுச்சா? புறப்பட்டுட்டியா? வா, வா...நான் கூட வர்ரேன்!