களஞ்சியப் பகுதி 36

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— (ராசா, ராணியைக் கொண்டு வந்து விடுகிறான். அவன் போனதும், ராணி வெளியே வர எத்தனிக்கும்போது எதிரே பாபு நிற்கிறான்.) பாபு: யாரது? ராணியா? ராணி: ம்...ஆமாம்! பாபு: ஹ...ஹேய்!...நாடகத்திலே நடிக்கவே மாட்டேன்னு என்கிட்ட சொன்னில்ல...நீ? ராணி: அது...அது...வந்து நான் உங்கிட்ட சொல்ல... பாபு: சரி, சரி! நான் வாங்கிக் கொடுத்த 'பிரசண்டேஷனை'யெல்லாம் இப்பவே திருப்பிக் கொடு! ராணி: அய்யய்யோ! அதையெல்லாம் உபயோகப்படுத்திட்டேனே! அது எவ்வளவு விலைன்னு சொல்லுங்க. வாங்கின விலையை அப்படியேத் திருப்பிக் கொடுத்துறிறேன்! பாபு: வாங்கின விலையா? உன்கிட்ட அவசியம் சொல்லணுமா? நான் வாங்குவேன்...அல்லது திருடுவேன்...அதைப் பத்தி ஒனக்கென்னா? கிண்டலா பண்றே? உன்கிட்ட பணம் வாங்க நான் என்ன பிச்சைக்காரனா? மரியாதையா நான் வாங்கிக் கொடுத்த சேலை ரவிக்கையை திருப்பிக் கொடு. பழந்துணியா இருந்தாலும் பரவாயில்லை...குடு! ராணி: பிச்சைக்காரன் இல்லீங்கறீங்க, ஆனா பெரிய குடுகுடுப்பைக்காரனா இருப்பீங்க போலிருக்கே! பாபு: இந்தக் கிண்டல், கேலி எல்லாம் உன் லெளவர் ராஜா இருக்கானே, அவன்கிட்ட வச்சுக்க! என் பிரசண்டேஷனுக்கு பதிலாக இப்ப இந்த வளையலையாவது கழட்டிக் கொடு! [அவளது கையைப் பிடிக்கிறான்.] ராணி: ஆ...ஈ!... பாபு: கொடு... [அப்போது சமரசம் பார்த்துவிடுகிறார்.] சமரசம்: டேய்...டேய்...டேய்...பாபு! பாபு: அத்தான், நான் ஒண்ணும்... சம: பேசாதே! இந்த தோட்டம் இதுக்காகவா கட்டிப் போட்டு இருக்கிறேன்? சமரசம் வீட்ல இதுமாதிரி ஒண்ணு நடக்கக்கூடாதுடா...போடா...போடா...இந்தாம்மா! [பாபு போய் திரும்பி வருகிறான்.] பாபு: இந்தாம்மா!...நீ வந்து... சம: டேய்...போ! போன மச்சான் ஏண்டா திரும்பி வந்தே? ரண்!...ஓடு! ஆ...இந்தாம்மா, நீ இந்த நாடகத்திலே வேஷம் போட்டவதானே!...இங்க எங்க வந்தே? ராணி: ஆமாங்க; ஒங்கிட்ட ஒரு விஷயம் சொல்லலாமுன்னு வந்தேன். சம: மண்ணாங்கட்டி! நீ அந்தப் பயலோடு பேசிகிட்டு இருந்ததை நான் பார்த்தேன்... ராணி: அய்யய்யோ! நான் ஒண்ணும் செய்யலீங்க...அவருதான் எங்கிட்ட தகாத முறையிலே நடந்துட்டாரு...இதோ பாருங்க, என் கையை... சம: அய்யய்யோ! [பாபுவுடன் சாந்தம் வருகிறாள்.] சாந்தம்: ஆஹா! இப்படி நடக்குதா? அயோக்கியத்தனத்துக்கு ஒரு அளவில்லாம போச்சு! சம: அதானே!... சாந்: உம்...நான் ஒண்ணும் பயித்தக்காரி இல்லே; ஒண்ணும் சும்மாவிடப் போறதில்லே; ஏம்மா மின்னல் கொடி! மாயப் பொடி தூவுறியா, மாயப் பொடி! சம: இந்தா...இந்தா...அந்தப் பொண்ணை பேசிப் பிரயோஜனமில்லே, அவனைக் கேளு! சாந்: ஆ...ஆ...! அவனைக் கேக்க வேண்டியதுதான்! ஏண்டா நீ என்கூடப் பொறந்த தம்பியா? இப்படியெல்லாம் நடக்குதுதே, நீ பாத்துக்கிட்டுத்தானே இருக்கிறே! பாபு: என்னக்காக...இது? சாந்: தினம் தினம் இவ இங்க வர்றதும், இந்த நந்தவனத்திலே ஓடியாடி விளையாடுறதும், அய்யோ!...அய்யோ!...கர்மம்...கர்மம்! என் தலையிலே எழுத்து...இந்த கெழட்டு வயசுலே... சம: ஏ...ஏ...! என்ன அவனைப்போயி கிழவங்கறே... சாந்: உம் உம்...அவனை சொல்லலே, அய்யா! அவனை ஒண்ணும் சொல்லலே! சம: இங்கே...வேற யாரு கிழவன்? சாந்: உம்...உம்மைதான்யா சொல்றேன்! சம: என்னையா? என்னையா? கெழவன்னுட்டியா? நான் கெழவனா...ஏ, மச்சான்? பாபு: ஆனா செய்கையிலே ஒண்ணும் கெழட்டுத்தனம் இல்லே!... சாந்: இந்தா புள்ளே! என் புருஷன்தானா கெடச்சான் நீ ஓடிப்புடிச்சு விளையாடுறதுக்கு? ராணி: என்னம்மா இது, நீங்க பாட்டுக்கு ஏதேதோ பேசிகிட்டே போறீங்களே?... சாந்: என்ன சொன்னே? (ராணியை அடிக்கிறாள்.) சம: ஏய்! இந்தா, நீ பேயில்ல; பொம்பளை! சாந்: போடி வெளியே! இன்னொரு தரம் இந்தக் காம்பவுண்ட்டுக்குள்ளே காலை வச்சே, காலை ஒடிச்சுபுடுவேன்! ஜாக்ரதை! சம: இந்தா...இந்தா...இந்தாபாரு, இந்த காம்பவுண்ட்ல பாதி எனக்கு சொந்தம்! நீ, பாதி வரலாம்! ராணி: ஆ... (சாந்தம் மீண்டும் சண்டை ஆரம்பிக்கிறாள்.) சம: இந்தா...இந்தா...நீ வந்துடு! (ராணியை அழைத்துக்கொண்டு போகிறார்.) சாந்: ஆகா! அவ்வளவு தூரத்துக்கு ஆயிப்போச்சா? இவுங்களை சும்மாவிடக்கூடாது! பாபு: ஆமாம்!... சாந்: பாபு... பாபு: யக்கா...? சாந்: நீ இவுங்களை 'பாலோ' பண்ணு... பாபு: இப்பவே பண்றேன்...அப்ப கொஞ்சம் பணம் வேணும்! சாந்: தர்ரேன் வா!