களஞ்சியப் பகுதி 25
58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
—★— [ராணி ராஜாவின் காரில் வந்து இறங்குகிறாள்] ராணி: தேங்க்ஸ் ராசா: மென்ஷன்...நோமென்ஷன். [ராசா போகிறான். கொஞ்ச தூரம் சென்றதும் காரின் பின் ‘சீட்’டில் ராணி மறதியாக விட்டுச் சென்றுவிட்ட பொட்டலத்தைப் பார்த்துவிடுகிறான். அதைத் திருப்பிக் கொடுக்க காரில் திரும்பி வருகிறான். சமரசத்தின் வீட்டு வாசலில் நாய் விரட்டவே, ஜன்னல் வழியே படர்ந்திருந்த கொடியைப் பிடித்து மேலே ஏறி, சாந்தம்மாவின் அறையில் குதிக்கிறான். சாந்தம்மாள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்] ராஜ: சாந்தம்மா! சமரசம் வீடுல்ல இது? அய்யய்யோ. என்னா பண்ணுறது? (அங்குள்ள பூத்தொட்டியை கீழே தட்டிவிடுகிறான். அதை எடுத்து வைக்கும்போது தன் கையிலுள்ள பொட்டலத்தை அங்கேயே வைத்துவிட்டு ஓடுகிறான்.) சம: திருடன் பிடி, உடாதே. ராஜா: சார்...சார்... சம: அடே ராஜா. ராஜா, ராஜா: சார்...சார்...அய்யய்யோ. சம: டேய், முருகா, சங்கரா. எல்லாம் வாங்கடா. டேய் பாபு...மச்சான். ஏ...மைத்துனரே....புடி உடாதே. பாபு: என்ன? என்ன இங்கே? சம: உடி புடாதே. பாபு: என்ன...என்ன? சம: அங்க...அங்க...டேய், இங்கே யாராவது ஓடுறதை பாத்தீங்களா? வேலை: பாக்கலீங்க. சம: பாக்கலல்ல...? வேலை: பாக்கல. சம: சரி, போயி படுத்துக்குங்க. அங்கே...பின்னாலே சமையல் கட்டுக்கு போயிடணும். போங்க, உம்... பாபு: என்னத்தான், என்ன நடந்தது? சம: உம்--அந்த ராஜாவை நீ வரச்சொன்னியா? பாபு: ராஜாவையா? சொல்லலியே. ஏன்? சம: சொல்லலீயே?... பாபு: சொல்லலீயே... சம: வந்துட்டானே...! பாபு: எங்கே...? சம: இங்க வந்துட்டான்...! பாபு: எப்போ?... சம: மெத்தைலேயிருந்து ஓடி வந்தான்--நான் பாத்தேன்! பாபு: ஆ!... சம: கண்ணால பாத்தேன்! அவனை உடப்படாது.... மச்சான் போச்சி; போச்சி... நீ போயி அவனை புடிச்சி கொண்ணுபோடு! பாபு: அத்தான்... சம: கொண்ணு புடு! பாபு: அத்தான், பாத்துகிட்டே இருங்க...இன்னிக்கி முடிவுதான்! சம: மச்சான்...ஆ...சமாதானம். சமாதானத்தோடேயே கொல்லு. புடிச்சி கொண்டா எங்கிட்ட ஆ...பாவி. (சாந்தத்தின் அறைக்குப் போகிறார். அங்கு ராஜா வைத்து விட்டு ஓடிய ராணியின் பொட்டலத்தை எடுக்கிறார்.) சம: இது என்னா? ஜாக்கெட்டு! புடவை! ஆ, இது நான் வாங்கிக் கொடுக்கலியே! எப்படி இது வந்தது? ஆ...உம்... [சந்தேகத்துடன் பீரோவில் வைத்துவிட்டுப் போகிறார்.]