களஞ்சியப் பகுதி 16

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— [ராணி “வேலையில்லாத் தொல்லையில்லை” என்று பாடிக் கொண்டிருக்கிறாள்.] ஞானக்கண்: ராணி! ராணி...! ராணி: அப்பா! ஞான: ஏன்னம்மா. ஒரே கொண்டாட்டமா இருக்கே? ராணி: வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதப்பா! ஞான: அப்படியா? உனக்கு வேலை கிடைச்சுட்டுதா? இந்த சந்தோஷமான செய்திக்கு நான் உனக்கு என்ன பரிசு கொடுக்கப்போகிறேன்! [ராணி தன் கையிலிருந்த மலரை அவரிடம் கொடுத்து...] ராணி: இந்தாங்கப்பா. இந்த ரோஜா மலரை நீங்களே என் தலையில்... ஞான: என்னா?... ராணி: ஹா, இல்லேப்பா! வேண்டாம்! நீங்க பார்த்து ஆனந்தப்பட முடியாத அலங்காரம் எனக்கு எதுக்கு அப்பா? [பூவை கீழே எறிந்து] உம், சாப்பிடுகிறீர்களாப்பா? ஞான: உனக்கு வேலை கிடைச்சதே நான் சாப்பிட்ட மாதிரிதாம்மா! ராணி: சரி, வாங்கப்பா!