காட்சி—47
காட்சி 47·46 காட்சிகளில்
சந் : கல்யாணி! கல்யாணி!
கல் : அண்ணு! அண்ணு என்னைப் பாருங்கள்?
குண : அண்ணனுக்கு என்ன செய்யுது அண்ணி.
சரஸ் : இதோ உங்கள் தம்பி குணசேகரன், உங்கள் தங்கை கல்யாணி!
சந் : இல்லை! அவன் அவள் அண்ணன் காலம் உதைத்து விட்டான், அவள் ஆற்றிலே விழுந்து விட்டாள் இல்லை அவளுக்கு அவள் அண்ணன் தூக்குத்தண்டனை விதித்துவிட்டான்.
குண : அண்ணு!
சந் : நான்தான் ஜட்ஜ்மெண்ட் எழுதினேன்; அண்ணனாக இருந்தால் என்ன தம்பியாக இருந்தால் என்ன? குற்றம் குற்றம்தான்.
சர : இதோ பாருங்கள் கல்யாணியின் குழந்தை.
(சேகருக்கு பைத்தியம் மாறுகிறது ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர்)
சரஸ் : யாரது?
விம : நீங்க இருங்க! நான் போய்ப் பார்த்து வருகிறேன்! (ஞானசேகரிடம்) என்ன வேண்டும்?
ஞான : அம்மா அய்யா இருக்காங்களா?
விம : ஏன்?
ஞான : நாங்க ஒரு பிச்சைக்கார மகாநாடு நடத்த போகிறோம் அதற்கு நிதி கேட்க (விமலா சிரிக்கிறாள்) ஏம்மா சிரிக்கிறீங்க? இப்ப அப்படித்தான் இருக்கும்! இன்னும் கொஞ்ச நாள் போனால் பிச்சைக்காரனும் மந்திரி ஆகிடுவான்.
(வீட்டு வேலைக்காரன் மூலம் ஞானசேகரன் என அறிகின்றனர். சிதறிய குடும்பம் சிந்தை மகிழ்கிறது)
விம : அப்போ நான் போயிட்டு வர்றேன்...
குண : இத்தனை நாளாகவா?
விம : வீட்டிலே தேடுவாங்க!
குண : அப்புறம் உன்னை எப்ப பார்க்கிறது?
விம : இனிமேல் பார்க்கவே முடியாது!
குண : ஏன்?
விம : அது அப்படித்தான்.
குண : சரி அப்படியானால் போ... (விமலாவின் சேலை குணசேகரன் கட்டிய கயிற்றினால் நிறுத்தப்படுகிறது)
புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டுப் போங்க இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே அந்த மார்பத்தைச் சொல்லிவிட்டுப் போங்க
சேகர் : என்னப்பா குணசேகரா
சரஸ் : தம்பி இதுக்கு இவ்வளவு பெரிய கயிறு தேவை இல்லையே! சின்னக்கயிறு...கழுத்துக்கு பொருத்தமா இருந்தாலே போதும்! அதிலே ஒரு மஞ்சள்...
குண : அதெல்லாம் இந்தக் காலத்துக்கு தேவையில்லை அண்ணி. ரெண்டு மாலை, ஒரு சொற்பொழிவாளர் விஷயம் முடிஞ்சது. (இந்நேரம் கல்யாணி வருகிறாள்)
கல் : அதோமட்டும் போதாது. என் பையனுக்கு ஒரு பொண்ணு பெத்துக் கொடுக்கணும்!
குண : வாங்க...அம்மா! ஒரு காலணவுக்கு இட்லி தர்றீங்களா? ஏன் சிரிக்கிறீங்க? பைத்தியக்காரனு நினைச்சிட்டியா மந்திரி நமது மாநகர் தன்னிலே மாத மும்மாரி மழை பெய்கிறதா டும்! டும்! (பழையதை நினைவூட்டுகிறான்)
ஞான : சரிதான்! அப்படியா நீங்களெல்லாம் இங்கேயே இருங்க. நான் வர்றேன்.
சேகர் : ஏன் தம்பி நீ எங்கே போறே
ஞான : நமக்கும் உங்களுக்கும் சரிப்பட்டு வராது. நீங்க பங்களா ஆபீஸ்னு பழகிட்டீங்க. நான் பரதேசி மடம், ஆலமரத்தடி இப்படி பழகிட்டேன் அங்கேயே போகிறேன்.
கல் : அப்போ நானும் வர்றேன்.
குண : நானும் புறப்பட்டுட்டேன் அப்படின்னு.
விம : எல்லோருமே பரதேசி மடத்துக்கு போறதுக்குப் பதில் பரதேசிகளெல்லாம் பங்களாவுக்கு அழைக்கிறது தான் நல்லது.
சேகர் : ஆமாம்! அதுதான் சரியான யோசனை; ஞானசேகரா உன் கொள்கைப்படி பங்களாவாசி பரதேசியாக மாறக்கூடாது! பரதேசிகள் பூராவையும் பங்களாவாசியாக மாற்றுகிறதுதான் நல்லது.
ஞான : அப்படின்னு நான் போய் எல்லோரையும் கூட்டிட்டு வர்றேன். (பேதமின்றி பாடுகின்றனர்)