காட்சி—44
காட்சி 44·46 காட்சிகளில்
சேகர் : கல்யாணி! கல்யாணி! என் கல்யாணி ஏழை அவளுக்கு நல்ல சேலை கிடையாது ஒரே புடவை ஒட்டுத் துணி...அவளுக்கு வைர நெக்லஸ் கிடையாது அவள் கழுத்திலே கயிறுதான் இருக்கும்...அய்யோ அதுகூட கிடையாது அவள் விதவை.
சரஸ் : டாக்டர்
டாக் : பயப்படாதீங்க மூணுக்கொதிப்பு மருந்து கொடுத்தால் சரியாகப் போய்விடும்.
சேகர் : மருந்து! ஹா ஹா எனக்கா மருந்து எனக்கு வேண்டாம் ஏழைக்குப் பசிக்காமல் இருக்க ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்க டாக்டர் கொடுக்கமாட்டீரா? கொடுக்கமாட்டீரா? அதுக்கப்புறம் குழந்தைகளை ஆற்றிலே போட்டுவிடுவார்கள் டாக்டர் ஆற்றிலே போட்டு விடுவார்கள் என் கல்யாணியும் அப்படித்தான் செய்து விட்டாள் கல்யாணி! கல்யாணி!