காட்சி—36
காட்சி 36·46 காட்சிகளில்
(பசி வாட்டவே கல்யாணி பிச்சைக் கேட்கிறாள்)
கல் : அய்யா நானும் குழந்தையும் சாப்பிட்டு ஆறுநாள் ஆகுது.
வீட் : நாங்க சாப்பிட்டு மூணுநாள் ஆகுது. நீ பிச்சைன்னு தெருத்தெருவா கேட்குற நாங்க வீட்டுக்குள்ளேயே இருக்கோம். இதுதான் வித்தியாசம் இன்னிக்கு ஜட்ஜ் சேகர் வீட்டிலே விருந்து அங்கே போயி கேளு.
கல் : எந்த வீடய்யா?
வீட் : அதோ தெரியுது பாரு அந்த மூல வீடுதான்.
(கல்யாணி போகிறாள்)