காட்சி—35

காட்சி 35·46 காட்சிகளில்

(இடம் அகதி முகாம்)

கல் : அண்ணு இரங்கூனிலிருந்து அகதிகள் எல்லாம் வந்திருக்காங்களாமே!

ஆபீ : ஆமா யாரு வேணும்?

கல் : சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன்.

ஆபீ : அப்படி ஒருவரும் இல்லையே! அதோ அந்த ஆலமரத்தடிலே ஒரு கூட்டம் இருக்கு அங்கே போயி விசாரி.

கல் : அண்ணு நீங்களெல்லாம் பர்மாவிலே இருந்துதானே வர்றீங்க?

ஒரு : ஆமாம்மா அகதிகளாக வந்தோம், ஆண்டிகளாக மாறிவிட்டோம்!

கல் : இரங்கூனில் என் அண்ணன்மார்களைத் தெரியுமா?

மற் : ஊரும். அவுங்க பேரு என்ன?

கல் : சந்திரசேகரன்... ஞானசேகரன்... குணசேகரன்...

ஒரு : எங்ககூட்டமே இவ்வளவு பேருதான் இதிலே உன் அண்ணன்மார்கள் இருக்காங்களான்னு பாரு (கல்யாணி பார்க்கிறாள் இல்லை)