காட்சி 33
காட்சி 33·46 காட்சிகளில்
(விமலா வீட்டில் குணசேகரன் தன் கதையைக் கூறல்)
குண : முத்து எடுக்கப் போய் கிளிஞ்சல் பொறுக்கிய கதையாக முடிந்தது. தங்கையின் வீட்டில் மகிழ்ச்சி தவழும், உற்சாகம் ஊஞ்சலாடும், களிப்பு கொஞ்சும் என்றெல்லாம் கனவு கண்டேன். ஆனால் அங்கு வேதனை விநாடிக்கு நூறு, வறுமையிலிடப்பட்டு பைத்தியக்காரனாய் அங்கு சென்றேன். இந்த நிலையில் அறிமுகம் ஒருகேடா? என் தங்கையிடம் நான் யாரென்று சொல்லி அவள் வாழ்வை வேதனைப்படுத்தக்கூடாது. அவள் அழுதது போதும். அண்ணனும் அழவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் என் அன்புத் தெய்வம் கல்யாணி என் கண்களுக்கு அப்பால் வெகுதூரம் சென்றுவிட்டாள். தேடுகிறேன்! தேடுகிறேன்! தேடிக்கொண்டே இருக்கிறேன்.
விம : அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. உன் கதையைக் கேட்ட பிறகு.
குண : ஏன்?
விம : அன்பு இருக்கிற அளவுக்கு உன்னிடத்தில் அறிவு இல்லை. இப்படி சொல்கிறேனே என்று ஆத்திரப்படாதே. உன் செல்வம் கொள்ளையடிக்கப்பட்ட போது நீ சென்றிருக்க வேண்டும் போலீஸாரிடம்.
குண : ஒரு பானையோடு போனேன்...பானம் அருந்தினேன்...பணத்தைப் பறிகொடுத்தேன். இதை போலீஸாரிடம் சொல்ல எனக்கு வெட்கமாயிருந்தது.
விம : பிச்சைக்காரனாய் திரிந்தாய் வெட்கமில்லை. திருடனாய் மாறினாய் அப்போதும் வெட்கமில்லை. ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்ல மட்டும் வெட்கப்பட்டிருக்கிறாய். வேடிக்கையான மனிதன்.
குண : உனக்குத் தெரியாது. சமுதாயமே பிச்சைக்கார மடம், பைத்தியக்கார விடுதி, திருடர் குகை. இதில் நான் மட்டும் வெட்கப்படுவானேன்.
விம : ஆம்! சமுதாயம் பிச்சைக்கார மடம்தான். ஆனால் அதில் நீ திருவோடு இல்லாத பரதேசி. சமுதாயம் பைத்தியக்கார விடுதிதான்; அதில் நீ கல்வெறியத் தெரியாத பைத்தியம். சமுதாயம் திருடர்களின் குகை; அதில் நீ கனக்கோல் பிடிக்கத் தெரியாத திருடன். சமுதாயத்தை சரசாரமாய் திடுக்கிடவே யோசித்துப் பார்! உனக்குத் தெரியாமலே சமுதாயத்தோடு சேர்ந்து முட்டாளாகி இருக்கிறாய் நீ.
குண : முட்டாளா? நானு?
விம : ஆம். ஆயிரம் முறை சொல்கிறேன். பிச்சைக்கார உடையிலே எத்தனைபேர் பணக்காரராய் இருக்கிறார்கள்...
விம : பைத்தியக்கார வேஷத்தில் எத்தனையோ லட்சாதிபதிகளாய் உலவுகிறார்கள். தேவாலயத் திருப்பணி, திருமாலுக்கு திருவிழா...இந்தத் திரையிலே எத்தனைத் திருடர்கள் உலவுகிறார்கள். நீயும் மாறினாயே திருடனாய்...பித்தனாய்...பிச்சைக்காரனாய். முடிந்ததா உன்னுள் அந்த மோகன வாழ்வு பெற?
குண : எனக்குத் தேவையானது மோகன வாழ்வல்ல, கல்யாணி! என் தங்கை கல்யாணி!
விம : இப்போதும் உன் ஜீவக் குற்றம் சாடுகிறேன். நீ ஒரு சுயநலவாதி. உன் சொந்தத் தங்கைக்காக அவள் நோய்த் வாழ்வுக்காக சுருண்டு போனாயே தவிர நாட்டிலே எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என்று நினைத்தாவது பார்த்தாயா? உன் சொந்த தங்கைக்காக நீ அன்பும் பேராசையிலே வேலை வாங்கிக்கொண்டு வீட்டுவாசல்களிலே நிற்பவருக்கு விம்மும் குரலில் பசி பசி எனப் பதறி அழும் பாவை யாரென்று பார்த்திருப்பாயே. அவர்கள் எல்லாம் யார்? கல்யாணி! கல்யாணி! என்று கத்துகிறாயே ஒரு கல்யாணியல்ல, ஒரு கோடிக் கல்யாணிகள் கண்ணீர் கம்பளியுமாக கதியற்று நடைப்பிணமாய் நாட்டிலே நடமாடுகிறார்கள். அதற்காக உன் நாவு அசைத்ததுண்டா? உன் நெஞ்சு துடித்ததுண்டா?
குண : எனக்கென்ன அடிக்கவேண்டும்? இந்தக் கேடு கெட்ட சமுதாயத்திற்கு, நன்றிகெட்ட நாட்டிற்கு, ஏழைகளை மிதித்து வாழும் எத்தர்களுக்குத் துடிக்கவேண்டும். நெஞ்சு உயிர் உடலெல்லாம் எனக்கேன் துடிக்கவேண்டும்!
விம : அந்தச் சமுதாயத்திலே நீயும் ஒரு அங்கம்.
குண : ஆனால் ஏழை.
விம : அப்படி ஆகப்பட்டாய் இதற்கேன்! உன்னை ஏமாற்றி பணத்தைப் பறித்துக் கொண்டாளே, அந்த நாட்டோடியை நான் பாராட்டுகிறேன்!
குண : பாராட்டுகிறாயா?
விம : ஆம்! உன் கண்ணைத் திறந்தவள் அவள்தான். நீ ஏழையாக ஆகப்படாவிட்டால் ஏழை உலகை நினைத்துக் கூட இருக்க மாட்டாய். அப்படி ஒரு உலகம் இருப்பதாகவே உனக்குத் தெரிந்திருக்காது. உன் உலகம் உல்லாசப் புரியாக இருந்திருக்கும். மாளிகையிலேயே வீசும் தென்றலை அனுபவிப்பாய்; குடிசையிலேயே குமுறும் புயலைக் காணமாட்டாய். சமுதாயக் கோணல்கள் வெறுக்கக் கற்றிருப்பாய். ஆனால் எரிமலையைத் தண்ணீர் ஊற்றி அணைக்கப் பார்க்கிறாய். மலைப் பாம்பை அடக்க மகுடி ஊதுகிறாய். சமுதாயப் புரட்சி ஆலகால விஷத்தின் கிளையை வெட்டுவதல்ல.
விம : அதன் ஆணிவேரையே பெயர்ப்பதுதான். வெட்கப்படு. நீ மேற்கொண்ட வேலைகளுக்கு வேதனை தீர்க்கும் மார்க்கம் நீ போட்ட வேஷங்களல்ல. அதற்காக மட்டும் இருந்திருக்கக் கூடாது. அவதிப்படும் ஆயிரமாயிரம் தங்கைகளுக்காக இருந்திருக்கவேண்டும். அதற்காக வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு விசாரப்படு.
குண : போதும்! போதும்!
விம : மன்னித்துக்கொள். உன் மனதைப் புண்படுத்தி விட்டேன். பாலைவனத்தை பூஞ்சோலையாக்கப் புதிய பாதை காண வேண்டும். உன்னைப்போல் மண்ணைவாரி இறைத்துப் பயனில்லை.
குண : ஆமாம்! உலகப் புத்தகத்தின் அனுபவ ஏடுகள் இப்படி புரட்டுகிறதே. இதற்கெல்லாம் ஆசிரியர் யார்?
விம : எல்லாம் அண்ணுதான்?
குண : அண்ணுவா?
விம : ஆம். முன்பே சொன்னேனே எனக்கு ஒரு அண்ணு இருப்பதாக. எங்கள் குடும்பமே வேடிக்கையானது. என் தந்தை ராமன் ஆண்டாலென்ன? ராவணன் ஆண்டாலென்ன? என்ற எதிர்த்துலகில் சஞ்சரிப்பவர். அண்ணுவோ புதுமையுள்ளம் படைத்தவர். அவர் தங்கை நான்.
(அன்றிரவு வேளையில்)
குண : (படுக்கையில்) கல்யாணி காட்டிலேவா மாட்டிலேவா நான் இங்கே கட்டிலிலே சே......சே......ரோம் நகமும் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தானாம். கல்யாணி! கல்யாணி!
(விமலா கனவு காண்கிறாள்—கனவிலே)
புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே உங்க எண்ணத்தை சொல்லிவிட்டுப் போங்க இளம் மனசைத் தூண்டிவிட்டுப் போறவரே அந்த மார்பத்தைச் சொல்லிவிட்டுப் போங்க (புது
உம்மை எண்ணியெங்கும் என்னிடத்தில் சொல்லாமல் இருட்டு வேளையிலே யாரும் காணாமலே திருட்டுத்தனமாய் சத்தம் செய்யாமலே சிந்தித்திருந்ததெல்லாம் சிந்தித்துப் பாராமலே (புது
என்ன சுத்தி பறந்தவன்டே சும்மா நீ போகாதே புத்தம் புதுமலரின் தேனைச் சுவைத்துப் போவாயே என்—இன்பக்கனவை பேணு கலைக்கிறாய்? அன்புக் கயிறுதான் அறுக்க யாராலும் ஆகாதையா
(விடிந்ததும்)
விம : குண! நான் இலட்சியவாதி என்று நினைத்துப் போய்விட்டாயா? இலட்சியவாதி என்னுள் காதல் வெறுத்த...
விம : மணிமேகலியாகவா இருக்கவேண்டும் கண்ணகியாகவும் இருக்கலாமே.
ஆபீ : தகப்பன் பெயர்
வந் : பரமசிவம்பிள்ளை
ஆபீ : உன் பெயர்
வந் : இராமச்சந்திரன்
ஆபீ : இராமச்சந்திரன் பிள்ளை...
வந் : எனக்குப் பிள்ளை கிண்ணை ஒண்ணும் இல்லீங்க.
ஆபீ : அட ஜாதியப்பா
வந் : அதுதானே கெட்டது
ஆபீ : தகப்பனார் தொழில்
வந் : கோவில் தர்மகர்த்தா
ஆபீ : பெயர்?
வந் : சொர்ணலால்
ஆபீ : (அடுத்தவனைப் பார்த்து) நீ எங்கேய்யா இங்கே வந்தே? மெட்ராசிலே நாலு பேருக்குத்தானய்யா இடம்.
வந் : நம்ம டில்லிக்காரனுடைய கொஞ்சம் பெரிய மனசு வையுங்கோ?
ஆபீ : நீ என்னைக்கய்யா டில்லிபோய்ச் சேரப்போறே?
(ஞானசேகரன் நொண்டிக்காலுடன் வருதல்)
ஞான : அய்யா...
ஆபீ : போ...போ...இடமில்ல.
ஞான : நாங்க ஒரு கூட்டமே...
ஆபீ : ஒருத்தருக்கே இடமில்ல...போங்கைய்யா சுத்த நியூசென்ஸ் இருக்கு.
ஞான : அப்படியானால் நாங்களெல்லாம் எங்கே போறது?
ஆபீ : என்னையே வந்து வழிகாட்டச் சொல்றியா போயி எங்கேயாவது விழுந்து சாவுறதுதானே.
ஞான : கால் ஒடிந்த பிறகும் சாவதற்குப் பயந்து தானே பல மாதங்கள் பட்டினி கிடந்து படாத பாடுபட்டு பசியுடன் பாதையோரத்திலே படுத்துறங்கி நடந்து வந்திருக்கிறோம். சாவதாக இருந்தால் பர்மாவிலே குண்டு வீச்சுக்கும் பயப்படாமல் எதிர்த்து நின்றிருந்தால் ஒரே கூட்டமாக பத்தாயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்போம். ஆனால் சாவதற்கு வழிகேட்க வழியில்லா சங்கடப்பட்ட எங்கள் மனதிற்கு சாந்தி கேட்கவே வந்தோம்.
ஆபீ : சட்டம்! இதென்ன ஆபீஸா? அல்லது ஒங்கவீடா?
ஞான : இடம் இல்லை உண்மையான அகதிகளுக்கு இடம் இல்லை வந்தவர்கள் எல்லாம் வரவேற்ற தேசத்தில்
பிறந்தவனுக்கு இடம் இல்லை உங்களைப்போன்ற இருதயமற்றவர்கள் இருக்கும்வரை மனிதனுக்கே இடமில்லை, அன்பு, அறம் இவை அத்தனைக்குமே இடம் இல்லை.
ஆபீ : கெட் அவுட் கெட் அவுட்.
ஞான : கருணைக் கடைக்குப் பெயர் கருணைமகால், இதற்குப் பெயர் அகதி முகாம் வா நாங்கள் போவோம்.
ஒரு : இப்படித் திரிவதைவிட்டா சிறைச்சாலைக்குச் செல்லலாம்.
ஞான : பொறு தம்பி திட்டவட்டமாக எதையும் யோசிக்காமல் ஆத்திரத்தில் நாலுபேர் எதையுமே செய்துவிட்டால் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டியதுதான். நம்முடைய நிலைமை உலகத்துக்குத் தெரியாது. பிச்சைக்காரர்கள் நாம்மட்டு மல்ல இந்தநாடு பூராவுமே பரந்துகிடக்கின்றனர். முதலில் பிச்சைக்காரர்கள் அத்தனை பேரையும் ஒன்று சேர்க்க வேண்டும். நமக்காக அரசாங்கமோ தேசக்கட்சிகளோ பாடுபடுவதாகத் தெரியவில்லை. நம்முடைய கோரிக்கைகளை வீடு வீடாக சென்று வெளியிடுவதைவிட நாட்டில் பரப்புவதே நலம். நம்முடைய குரல் கலெக்டருக்கு எட்டிப் புண்ணியம் இல்லை. அரசாங்கத்துக்கு எட்ட வேண்டும். பிச்சைக்காரர்கள் அத்தனை பேரையும் ஒன்று சேர்த்து மகாநாடு ஒன்று நடத்த வேண்டும். அந்த மகாநாட்டுக்கு சென்னை மாகாணப் பிச்சைக்காரர் மகாநாடு என்று பெயரிட வேண்டும். (எல்லோரும் சிரிக்கின்றனர்) ஏன் சிரிக்கிறீர்கள்? சிரிப்பதற்காகச் சொல்லவில்லை. சிந்தனை செய்து பாருங்கள். அதிலே பிறந்த தீர்மானம் நமக்கு ஓட்டுரிமை வேண்டுமென்பது. அதைப் பெற்று விட்டால் நாம் எல்லோரும் கூட நிற்கலாம். நம்மை எதிர்த்து போட்டியிட எவரும் துணியமாட்டார்கள். நம்முடைய மகாநாட்டில் நிறைவேற்றும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். நாம் ஓட்டுகிற பரதேசி அரசாங்கத்தையே நடுங்க வைக்க வேண்டும். (உயிர் போனாலும் சரி, நமது உரிமைக் குரல் உரக்க எழுப்ப வேண்டும். வருங்கால நமது சமுதாயத்தை வளம்போல் வாழுகின்ற வழிக்கு அமைக்க வேண்டும் என்று கூட்டத்தினர் குச்சலிட்டனர்.)