காட்சி—32

காட்சி 32·46 காட்சிகளில்

(ஒருவன் நாய்க்கு பிஸ்கட் கொடுத்துக் கொண்டிருக்கிறான். அப்போது கல்யாணி வருதல்)

ஒரு : டார்லிங்...

கல் : ஐயா குழந்தையும் நானும் பட்டினி! குழந்தையின் வயிறு காயுது! பால் வாங்க ஏதாவது ஒரு அரையணா...

ஒரு : போ...போ...

கல் : அந்த நாய்க்கு போடுற பிஸ்கட்டிலாவது ஒண்ணு கொடுங்களையா?

ஒரு : என்ன சொன்னே? நாய்னு சொன்னே? இது என் டார்லிங்...போ...போ...