காட்சி—37

காட்சி 37·46 காட்சிகளில்

(வெளியுக்கு போயிருந்த நொண்டி வருதல்)

நொண்டி : இராகவா இன்னிக்கு ஏதாவது விசேஷம் உண்டா?

ராக : பாலம் ஒரு பிச்சைக்காரி ஒரு குழந்தையுடன் வந்தாள் நாங்களெல்லாம் யாருன்னு கேட்டாள். நாங்கள் இரங்கூனிலே இருந்து சம்பாதிச்சிட்டு வர்றோம்னு சொன்னோம்... இரங்கூனிலேன்னுமன்று அண்ணன்மார்களைத் தெரியுமான்னு கேட்டாள். தெரியாதுன்னு சொல்லிவிட்டோம்.

நொ : அவளது பெயரை என்னவென்று சொன்னாள்?

ஒரு : அதுநம்ம தமிழ்நாட்டு பெயராகவே தெரியலியே?

ராக : என்னமோ—சந்திரசேகரன்...

நொ : சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் என்கிறாளா?

எல் : ஆம்...

நொ : அய்யோ கல்யாணி! என் தங்கை கல்யாணி! கல்யாணி! (என்று கதறி கீழே விழுகிறான்)