காட்சி—30
காட்சி 30·46 காட்சிகளில்
(நாராயணப் பிள்ளையும், கருப்பனும் கோவிலுக்குச் சென்று வரும் வழியில்)
பிச்சை : ஐயா! அந்த தேங்காய் முடியிலாவது ஒண்ணு கொடுங்கையா! (கருப்பன் கொடுத்தல்)
நாரா : ஏண்டா திமிர் பிடிச்ச பயலே! தேங்காயை ஏண்டா கொடுத்தே?
கருப் : கோயிலிலே பிரசங்கத்திலே சொன்னுங்களே தர்மம் தலைகாக்கும்னு.
நாரா : கோயிலிலே உனக்கும் எனக்குமா சொன்னுன்? பணம்டா! கொண்டா இங்கே (திருப்பி கேட்கிறார்)
பிச் : ஏழைங்க எஜமான்!
நாரா : ஏழை...ஏழவு (அடித்தல்) ஏ—நாயே! ஒனக்குப் பிரசாதம் கேக்குதா? (இந்நேரம் குணசேகரன் வருகிறான்)
நாரா : யாரடா நீ?
குண : உங்களை எங்கேயோ பாத்தாப்புல இருக்குதுல்லே
நாரா : பார்த்திருப்பே பார்த்திருப்பே.
குண : நீங்க...நீங்க...
நாரா : ஜெனரல் மெர்ச்சண்ட் நாராயணப் பிள்ளை
குண : நானு சேர்மையா...
நாரா : வேலைக்காரனு?
குண : உங்களை...
நாரா : சேர்மன் பார்க்கணும்ன்றா?
குண : ஆமா! ஆமா! அவருகூட உங்ககிட்டே
நாரா : சர்க்கரை வேணும்ன்றா? அவருக்கு மூட்டை மூட்டையால்ல வேணும், சாயந்திரமாக நம்ம வீட்டு பக்கமா வா இரகசியமாக தர்றேன்.
குண : ப்ளாக்கிலே தர்றீங்களா?
நாரா : அட நீ என்னப்பா?
குண : அப்போ...சாயந்திரமா வரட்டுங்களா? ப்ளாக்கிலே தர்றீங்களா?
நாரா : வா...வா.
குண : அப்போ; இப்போ நான் போகட்டுங்களா?
(நாராயண பிள்ளையை அடிக்கிறான்)
நாரா : என்னடாப்பா இது?
குண : இது அடிடாப்பா! ஏ நாயே உனக்குத் தேங்கா கேக்குதோ? ஏழைகளுக்குப் பிரசாதம் கேக்குதா? கொண்டாடா இங்கே?
நாரா : பராசக்தி உன்னை ஒட்டப்பசங்க இன்னிக்கு அடிக்கிற அளவுக்கு வந்துட்டானுங்க.
குண : ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பராகி விட்டால் ஒரு நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பராகிவிடுவார் உணரப்பா நீ! ப்ளாக்கிலே தர்றீங்களா? இந்தா ப்ளாக்கிலே ஒண்ணு வாங்கிக்கோ... (நாராயணரைக் குணசேகரன் காலால் உதைத்துக் கீழே தள்ளுகிறான்)