காட்சி—29

காட்சி 29·46 காட்சிகளில்

(தெருவழியாக பசியால் துடித்துச் செல்கிறாள் கல்யாணி)

பொருளே இல்லார்க்கு தொல்லையா புது வாழ்வே இல்லையா இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா இறைவா நீ சொல்லையா (பொரு பசியாலே வாடும் பாவி முகத்தை பார்ப்போர் இல்லையா எம்மைக் காப்போர் இல்லையா ஏழை எம்மை ஆதரிக்கும் இரக்கம் இல்லையா இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா இறைவா நீ சொல்லையா? (பொரு வறுமைப் பேயை விரட்ட நாட்டில் வழியே இல்லையா அகற்றிடவே இல்லையா பொருளில்லாதார் இல்லையெனும்—உலகில் பொருளில்லாதார் இல்லையெனும் திருநாளே இல்லையா இருள் நீங்கும் மார்க்கம் இல்லையா இறைவா நீ சொல்லையா (பொரு