காட்சி—26
காட்சி 26·46 காட்சிகளில்
(மதுரையில் கல்யாணியைக் காணாமல் திருச்சி வந்து சேரும் குணசேகரன் ரெயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கிறான். அச்சமயம் ரெயிலில் வந்த விமலா என்ற பெண்ணின் சாமான்களைக் கூலிக்குத் தூக்கி வருவதாக எடுத்துக்கொண்டு ஓடுகிறான். சிலர் அவனைத் துரத்தவே ஆகாரத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு ஓடுகிறான். (தன் பசியின் கொடுமையை அறிந்து)
(ஆகாரத்தை திருடி வந்தவன் விமலா வீட்டின் கொல்லைப்புறத் தோட்டத்தின் கிணற்றங்கரையில் அமர்ந்து ஆகாரத்தைச் சாப்பிட்டுக் கொண்டே பாடுகிறான்)
கா—கா—கா—கா— ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றுக அன்போடு ஓடிவாங்க என்றே அனுபவப் பொருள் விளங்க—காக்கை அண்ணுவே நீங்கள் அழகான வாயால் பண்ணைப் பாடுறீங்க—கா கா என ஒண்ணுகக் கூடுறீங்க—வாங்க (கா சாப்பாடு இல்லாம தவிக்குதுங்க—ஜனம் கூப்பாடுபோட்டு மனம் குமுறுதுங்க—உயிர் காப்பாத்த கஞ்சி தண்ணி ஊத்துங்க என்றால் தாப்பாளப் போடுறீங்க பாருங்க—அந்த சண்டாளர் எங்கவே—தன்னலமும் நீங்கவே தாரணி மீதிலே பாடுங்க ராகம் (கா
எச்சில் தனிலே எறியும் சோத்துக்கு பிச்சைக்காரர் சண்டை—ரோட்டிலே இளைத்தவன் வலுத்தவன் இனச்சண்டை பணச்சண்டை எத்தனையோ இந்த நாட்டிலே பட்டி சாதி நீங்க—எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க பட்சமாயிருங்க பகிர்ந்துண்டு வாழுங்க பழக்கத்தை மாத்தாதீங்க—எங்கே பாடுங்க (கா
(விமலா பாடலின் கவர்ச்சியால் இழுக்கப்பட்டு அங்கு வர அவளைக் கண்டு குணசேகரன் பயந்து ஓடுகிறான்! அவள் அவனுக்கு “புதுமைப்பித்தன்” என்ற பட்டம் சூட்டுகிறாள்)