காட்சி—22
காட்சி 22·46 காட்சிகளில்
மறுநாள் காலை மைனர்கள் சிலர் கடை ஒன்றின் முன் நின்று அரட்டை அடிக்கின்றனர். அவர்களுக்கு அருகில் குணசேகரன் பல் துலக்கிக்கொண்டிருக்கிறான். அப்போது—)
1—வது : எங்கடா இராத்திரியெல்லாம் ஆளையே காணும்.
2—வது : இராத்திரியெல்லாம் ஒரே சீட்டாட்டம் கண்ணெல்லாம் எரியுது!
1—வது : அட கண்ணுதான் எரிஞ்சுது! காசாவது கிடைச்சுதா? ம்...அதுதானே இல்ல.
2—வது : எங்கடா வேணுவை? ஆளையே காணும்.
1—வது : ஆள் மஞ்சமெத்தையிலே படுக்க போயிருச்சி அவதான் இட்லிகாரி கல்யாணி இல்லே! அவள் கிட்டே நம் பயல் வால் ஆட்டியிருக்கான்...பாச்சா பலிக்கலே...நல்ல அடி கொண்டுட்டான் பாவம்.
1—வது : டேய் சும்மா இருடா! நீ வேற ஏண்டா ஒட்டையை வீணு அலட்டிக்கிட்டே? எவனோ பைத்தியக்கார வேஷத்திலே திரியுறவனும் கல்யாணிக்குக் கள்ளப்புருஷனும்...
(இதைக் கேட்ட குணசேகரன் ஆத்திரத்துடன்)
குண : (மைனர்களை அடித்து) என்ன சொன்னே, என் கல்யாணிக்கா களங்கம்? கல்யாணி என் தங்கையடா என் தங்கை! இப்போதே போகிறேன் நான் யாரென்பதை சொல்லிவிடுகிறேன்.
(தங்கை வீட்டை நோக்கி வெறிகொண்டு ஓடுகிறான்)
(குடிசையில் கல்யாணியைக் காணாமல்)
குண : சந்தர்ப்பம் என் தங்கையை விதவையாக்கியது சமுதாயம் அவள் வாழவிடவில்லை (கல்யாணியைக் காணாது திரும்புகிறான் வரும் வழியில்)
குண : அப்பா இந்தப் பக்கம் ஒரு குழந்தையோட ஒரு விதவை...
வழிப் : அடே அது உனக்குத் தெரிஞ்ச பொண்ணுதானு? அதோ அந்தக் கூட்டத்திலே போய் பாரு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க.
குண : ஆ—கல்யாணி; (அங்கே செத்துக் கிடக்கும் பெண் கல்யாணி அல்ல என்பதை அறிந்து திரும்புகிறான்)
[கல்யாணி மதுரையில் இட்லி வியாபாரத்தை விட்டு ஊரை விட்டே வெளியேறுகிறாள்]