காட்சி 20
காட்சி 20·46 காட்சிகளில்
(இடம்ரோடு)
வியா : வடை! முறுக்கு! அய்யா! முறுக்கு வேணுமா?
குண : மூணு அணாவுக்கு கொடு
வியா : அட கடவுளே! போணி ஆயி மூணு நாள் ஆகுது வடை எவ்வளவுக்கு முறுக்கு எவ்வளவுக்கு?
குண : அட ரெண்டு அணாவுக்கு இதுவும் ஓரணாவுக்கு அதுவும் கொடப்பா! (கொடுக்கிறான்)
வியா : ஏம்பா உன் கை நல்லா நடக்கும்லே?
குண : கை நடக்காது—கால் நடக்கும் (என்று செய்கை மூலம் காட்டுகிறான்)
வியா : அய்யோ—பாவம் பசி அதிகம் போலிருக்கு? சாப்பிடு சாப்பிடு!
அடுத்த : ஏ...முறுக்கு
வியா : இருங்க அய்யாகிட்டே காசு வாங்கிட்டு வர்றேன் காசு எடப்பா—உம்—காசு எடு—
குண : (சிரிக்கிறான்)
வியா : ஏனப்பா சிரிக்கிறே?
குண : (மீண்டும் சிரிக்கிறான்)
வியா : அட! என்னப்பா மறுபடியும் சிரிக்கிறே காசை எடு நாலு தெருவுக்கு போகணும்.
குண : ஏன் பொறுக்கவா?
வியா : யாரடா இவன் திமிறுபடைச்சவன் காசு எடுன்னா.
குண : டேய்!—காசா? உனக்கா? எதுக்கு?
வியா : ஏம்பா மாமா மச்சான் மாதிரி விளையாடுறே, என்னை ஏமாத்தலாம்னு பாக்றயா என்னை யாருனு நினைச்சே!
குண : அப்படின்னா இன்னும் ரெண்டணாவுக்குக் கொடு.
வியா : அப்படி வா வழிக்கு! இந்தா வாங்கிக்கோ? (கொடுக்கிறான்—சாப்பிடுகிறான்) காசு எடுப்பா—ம்—நேரமாகுது.
குண : (பைத்தியம்போல்) அடடா பயலே—
(வியாபாரியை விரட்டி விட்டுப் பெட்டியைத் தான் தூக்கிக்கொண்டு புறப்படுகிறான்)
குண : முதலாளி முறுக்கு வேணுமா?
முத : சூடா இருக்கா?
குண : ரெண்டும் இருக்கு
முத : அப்ப எனக்கு இதிலே ஒரணவுக்கு அதிலே ஒரணவுக்கு கொடு.
குண : காசை எடு.
முத : அட முதல்ல கொடுப்பா
குண : ஏங்க உங்களுக்கு ரெண்டணவுக்கு போதுமா?
முத : போதாது! காசை ரொம்ப செலவழிக்க கூடாது எப்பா ரெண்டு அணவுக்கு வாங்கியிருக்கேனே கொஞ்சம் ஓசி
குண : அய்யோ இதிலே கூட உங்க பிச்சைக்கார புத்தி போகலியா! இந்தா ஓசி, (கொஞ்சம் பிட்டுக் கொடுக்கிறான்) காசை எடு.
முத : காசா? ரூபாய்க்கு சில்லறை இருக்கா?
குண : என்ன?
முத : ஒரு ரூபாய்க்கு சில்லறை இருக்கா?
குண : சில்லறையா? எங்கிட்டேயா? அட பாவி கொண்டாடா. (ரூபாயை வாங்கி கையில் வைத்துக்கொண்டு) நல்ல சமயமடா இதை நழுவ விடுவாயோ—ஏதுங்காணும் இந்தக் காசு?
முத : ஏதுங் காணும் இந்தக் காசா?
குண : டேய் ‘எய்ட் நாட்திரீ’ கொண்டு போடா இந்தக் கொட்டாபுளியை [ரூபாயுடன் ஓடி விடுகிறான்]
முத : சரிதான் பெட்டி இருக்குதல்ல
[வியாபாரி வந்து பெட்டியைத் தூக்குதல்...முதலாளி தூக்கவிட மறுத்தல். வியாபாரி பெட்டியைத் தூக்கி முதலாளியின் தலையின்மீது வைத்தவுடன் போலீஸ் வந்து பிடித்துக்கொண்டு போதல்]