காட்சி—18

காட்சி 18·46 காட்சிகளில்

(மைனர்கள் சீட்டு விளையாடிக் கொண்டிருக்கின்றனர்)

1வது : திருப்பப்பா

2வது : மூணு ராஜா தம்பி

1வது : எனக்கு மட்டும் மூணு ஆஸ் இருந்தால்

வேணு : ஒரு லாண்டறியே வச்சிருவே

1வது : என்னப்பா சிரிக்கிறீங்க? நான் தான் ஆட்டத்துக்கு வர்லே.

வேணு : ஏது ஆள் அவுட்டா...சும்மா கெடப்பா போன காசையெல்லாம் திருப்பிடலாம்.

1வது : ஏண்டா அதற்குக்கூட காசு வேணுமே! ஏய்...நீ வச்சிருந்தால் கொடுக்கமாட்டியா? ஏய் ஒரு டேபின் மட்டும் கொடப்பா

வேணு : பைசா நஹி! என்னப்பா...இரும்புப் பெட்டி சாவியை ஒங்க அப்பா ஒன்கிட்டே கொடுத்திருக்காரு பயப்பட்றியே...

1வது : சாவிதானே...எனக்கு அடிக்கடி காக்கா வலிப்பு வர்றது வழக்கம் அதனாலே கொடுத்திருக்காரு.

வேணு : ஏய்—அங்கே வர்றியா போவோம்...

1வது : எங்கே?

[மைனர் வேணுவால் அழைத்துச் செல்லப்படுகிறான்]