காட்சி—5
காட்சி 5·46 காட்சிகளில்
[இரங்கூனில்]
ஞா : (பேப்பர் படித்தல்) உலகப் போரின் உச்சநிலை ஜப்பான் யுத்த முஸ்தீபு! இரங்கூன் கடலோரங்களில் எதிரிகள் கப்பல்கள் இந்தியா போய்ச் சேரவில்லை—அண்ணு இந்தச் சேதியை அப்பாவும் தங்கையும் கேள்விப்பட்டால் ரொம்பவும் வருத்தப்படுவாங்க. கல்யாணக் காரியமெல்லாம் தடபுடலாக நடந்துகிட்டு இருக்கும்.
சந்திர : ஆமாம் குணசேகரன் புறப்பட்டுப்போன கப்பல் இன்னும் மெட்ராசுக்கே போய்ச் சேரலியாமே மணக்கோலத்தில் இருக்கும் தங்கையை பார்க்க முடியாத பாவியாகி விட்டோம்.
[இந்நேரம் ரேடியோவில் யுத்தச் செய்தி சொல்லப்படுகிறது. இன்று எதிரிகளின் குண்டு வீச்சினில் பலத்த சேதம்...சுமார் ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். பர்மாவில் ஒரு நகரமே காலியாகி விட்டது.]
சந் : நாம் இப்படி எத்தனை நாளைக்குத்தான் உயிர் வாழுறதாம்.
ஞான : உயிர் தப்புவதே பெரிய கஷ்டம்போல் இருக்கு.
சந் : இனியும் நம்ம இங்கு இருக்கக் கூடாது நடந்தாவது இந்தியா போய்ச் சேருவோம்.
[இரங்கூனை விட்டு கால்நடையாக வெளியேறுகின்றனர்]